[2:170]
மேலும், "அல்லாஹ்
இறக்கி வைத்த
இ(வ்வேதத்)தைப்
பின்பற்றுங்கள்" என்று
அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல!
எங்களுடைய மூதாதையர்கள்
எந்த வழியில்
(நடக்கக்) கண்டோமோ, அந்த
வழியையே நாங்களும்
பின்பற்றுகிறோம்" என்று
கூறுகிறார்கள்;. என்ன!
அவர்களுடைய மூதாதையர்கள், எதையும்
விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும்
இருந்தால் கூடவா?
[2:171]
அந்த
காஃபிர்களுக்கு
உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு
மேய்ப்ப)வனின்
கூப்பாட்டையும், கூச்சலையும்
தவிர வேறெதையும்
கேட்டு, அறிய இயலாதவை(கால்
நடை) போன்றவர்கள்;. அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும்
இருக்கின்றனர்;. அவர்கள் எ(ந்த
நற்போ)தனையும்
உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
[2:172]
நம்பிக்கை
கொண்டவர்களே! நாம் உங்களுக்கு
அளித்துள்ளவற்றில்
தூய்மையானவற்றையே
உண்ணுங்கள்; நீங்கள்
அல்லாஹ்வையே வணங்குபவர்களாக
இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்தி
வாருங்கள்.
[2:173]
தானாகவே
செத்ததும், இரத்தமும், பன்றியின்
மாமிசமும், அல்லாஹ்
அல்லாத பெயர் சொல்லப்பட்டதும்
ஆகியவைகளைத்தான் உங்கள்
மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால்
எவரேனும் பாவம்
செய்யாத நிலையில்
- வரம்பு மீறாமல்
(இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால்
அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக
அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக
இருக்கின்றான்.
[2:174]
எவர், அல்லாஹ்
வேதத்தில் அருளியவற்றை
மறைத்து அதற்குக்
கிரயமாக சொற்பத்
தொகை பெற்றுக்
கொள்கிறார்களோ, நிச்சயமாக
அவர்கள் தங்கள்
வயிறுகளில் நெருப்பைத்
தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை.
மறுமை நாளில் அல்லாஹ்
அவர்களிடம் பேசவும்
மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும்
மாட்டான்; அவர்களுக்குத்
துன்புறுத்தும்
வேதனையும் உண்டு.
[2:175]
அவர்கள்தாம்
நேர்வழிக்கு பதிலாக
வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு
பதிலாக வேதனையையும்
விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள்.
இவர்களை நரக நெருப்பைச்
சகித்துக் கொள்ளச்
செய்தது எது?
[2:176]
இதற்குக்
காரணம்; நிச்சயமாக அல்லாஹ்
இவ்வேதத்தை உண்மையுடன்
அருள் செய்தான்; நிச்சயமாக
இன்னும் இவ்வேதத்திலே கருத்து
வேறுபாடு கொண்டவர்கள்
(சத்தியத்தை விட்டும்)
பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.