Al-Hijr
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[15:1]
அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும்
தெளிவான திருக்குர்ஆனுடையவுமான
வசனங்களாகும்.
[15:2]
தாங்களும்
முஸ்லீம்களாக இருந்திருக்க
வேண்டுமே, என்று
காஃபிர்கள் (மறுமையில்
பெரிதும்) ஆசைப்படுவார்கள்.
[15:3]
(இம்மையில்
தம் விருப்பம் போல்)
புசித்துக் கொண்டும், சுகம்
அனுபவித்துக்
கொண்டும் இருக்க
அவர்களை விட்டு விடுவீராக
அவர்களுடைய வீணான
ஆசைகள் (மறுமையிலிருந்தும்)
அவர்களைப் பராக்காக்கி விட்டன
(இதன் பலனைப் பின்னர்)
அவர்கள் நன்கறிந்து
கொள்வார்கள்.
[15:4]
எந்த
ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய
பாவங்களின் காரணமாக)
அவர்களுக்கெனக்
குறிப்பிட்ட காலத்தவணையிலன்றி நாம்
அழித்துவிடுவதுமில்லை.
[15:5]
எந்த
ஒரு சமுதாயமும்
தனக்குரிய தவணைக்கு
முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும்
மாட்டார்கள்.
[15:6]
(நினைவூட்டும்)
வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே!
நிச்சயமாக நீர்
பைத்தியக்காரர்தான்
என்றும் கூறுகின்றனர்.
[15:7]
நீர்
உண்மையாளரில்
ஒருவராக இருப்பின்
நீர் எங்களிடத்தில்
மலக்குகளைக் கொண்டு
வந்திருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.)
[15:8]
நாம்
மலக்குகளை உண்மையான
(தக்க காரணத்தோடு
அல்லாமல் இறக்குவதில்லை
அப்(படி இறக்கப்படும்)
போது அ(ந் நிராகரிப்ப)வர்கள்
அவகாசம் கொடுக்கப்பட
மாட்டார்கள்.
[15:9]
நிச்சயமாக
நாம் தான் (நினைவூட்டும்)
இவ்வேதத்தை (உம்மீது)
இறக்கி வைத்தோம்; நிச்சயமாக
நாமே அதன் பாதுகாவலனாகவும்
இருக்கின்றோம்.
[15:10]
(நபியே!) நிச்சயமாக
நாம் உமக்கு
முன்னால் முந்திய
பல கூட்டத்தாருக்கும்
நாம் (தூதர்களை)
அனுப்பிவைத்தோம்.
[15:11]
எனினும்
அவர்களிடம் (நம்முடைய) எந்தத்
தூதர் வந்தாலும்
அவரை அந்த மக்கள்
ஏளனம் செய்யாமல்
இருந்ததில்லை.
[15:12]
இவ்வாறே
நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில்
இ(வ் விஷமத்)தைப்
புகுத்தி விடுகிறோம்.
[15:13]
அவர்கள்
இ(வ் வேதத்)தின்
மீது ஈமான்
கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு
முன்னிருந்தவர்களின்
இந்நடை முறையும் (இறுதியில்
அவர்கள் அழிவும்)
நிகழ்ந்தே வந்துள்ளன.
[15:14]
இவர்களுக்காக
நாம் வசனத்திலிருந்து
ஒரு வாயிலைத் திறந்து
விட்டு, அவர்கள் அதில்
(நாள் முழுதும் தொடர்ந்து)
ஏறிக் கொண்டிருந்தாலும்
(அவர்கள் ஈமான்
கொள்ள மாட்டார்கள்).
[15:15]
நம்
பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு
விட்டன இல்லை!
நாங்கள் சூனியம்
செய்யப்பட்ட ஒரு
கூட்டமாகி விட்டோம் என்று
நிச்சயமாகக் கூறுவார்கள்.