[15:16]
வானத்தில்
கிரகங்களுக்கான பாதைகளை
நிச்சயமாக நாம்
அமைத்து பார்ப்போருக்கு
அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
[15:17]
விரட்டப்பட்ட
ஒவ்வொரு ஷைத்தானை விட்டும்
நாம் அவற்றைப்
பாதுகாத்தோம்.
[15:18]
திருட்டுத்தனமாக
ஒட்டுக் கேட்கும்
ஷைத்தானைத்தவிர
(அப்போது) பிரகாசமான
தீப்பந்தம் அந்த
ஷைத்தானை (விரட்டிப்)
பின் பற்றும்.
[15:19]
பூமியை
நாம் விரித்து
அதில் உறுதியான, (அசையா)
மலைகளை நிலைப்
படுத்தினோம்; ஒவ்வொரு
பொருளையும் அதற்குரிய அளிவின்
படி அதில் நாம்
முளைப்பித்தோம்.
[15:20]
நாம்
அதில் உங்களுக்கும் நீங்கள்
எவருக்கு உணவளிக்கிறவர்களாக
இல்லையோ அவர்களுக்கும்
வாழ்க்கைக்குத் தேவையான
பொருட்களை ஆக்கியுள்ளோம்.
[15:21]
ஒவ்வொரு
பொருளுக்குமான பொக்கிஷங்கள்
நம்மிடமே இருக்கின்றன
அவற்றை நாம் ஒரு
குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல்
இறக்கிவைப்பதில்லை.
[15:22]
இன்னும்
காற்றுகளை சூல்
கொண்ட மேகங்களாக
நாமே அனுப்புகிறோம்; பின்னர்
வானத்திலிருந்து
நாம் மழை பொழிவித்து, அதனை
உங்களுக்கு நாம்
புகட்டுகிறோம்
- நீங்கள் அதனைச்
சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
[15:23]
நிச்சயமாக
நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே
மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும்
வாரிஸாக (உரிமையாளனாக)
நாமே இருக்கின்றோம்.
[15:24]
உங்களில்
முந்தியவர்களையும் நாம்
நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும்
நாம் நிச்சயமாக
அறிவோம்.
[15:25]
நிச்சயமாக
உம்முடைய இறைவன் (இறுதி
நாளில்) அவர்களை
ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக
அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்)
நன்கறிபவன்.
[15:26]
ஓசை
தரக்கூடிய கருப்பான
களி மண்ணால்
மனிதனை நிச்சயமாக
நாமே படைத்தோம்.
[15:27]
(அதற்கு)
முன்னர் ஜின்னை (ஜின்களின்
மூல பிதாவை) கடிய
சூடுள்ள நெருப்பிலிருந்து
நாம் படைத்தோம்.
[15:28]
(நபியே!) உம்முடைய
இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும்
கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை
நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,
[15:29]
அவரை
நான் செவ்வையாக உருவாக்கி, அவரில்
என் ஆவியிலிருந்து
ஊதியதும், "அவருக்கு
சிரம் பணியுங்கள்" என்றும்
கூறியதை (நினைவு
கூர்வீராக)!
[15:30]
அவ்வாறே
மலக்குகள் - அவர்கள் எல்லோரும்
- சிரம் பணிந்தார்கள்.
[15:31]
இப்லீஸைத்தவிர
- அவன் சிரம் பணிந்தவர்களுடன்
இருப்பதை விட்டும்
விலகிக்கொண்டான்.