[15:32]
இப்லீஸே!
சிரம் பணிந்தவர்களுடனே
நீயும் சேராமல்
(விலகி) இருந்ததற்குக்
காரணம் என்ன? என்று (இறைவன்)
கேட்டான்.
[15:33]
அதற்கு
இப்லீஸ், "ஓசை தரும்
கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள
(ஒரு) மனிதனுக்கு
நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று
கூறினான்.
[15:34]
அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு
நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக
இருக்கிறாய்.
[15:35]
மேலும், நிச்சயமாக
நியாயத் தீர்ப்பு
நாள் வரை உன் மீது
சாபம் உண்டாவதாக!
என்று (இறைவனும்)
கூறினான்.
[15:36]
என்னுடைய
இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும்
நாள்வரை எனக்கு
அவகாசம் கொடுப்பாயாக!
என்று இப்லீஸ்
கூறினான்.
[15:37]
நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில்
ஒருவானாவாய்;
[15:38]
குறிப்பிட்ட
நேரத்தின் நாள் வரும்
வரையில் என்று
அல்லாஹ் கூறினான்.
[15:39]
(அதற்கு
இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை
நீ வழிகேட்டில்
விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில்
(வழி கேட்டைத்தரும்
அனைத்தையும்) அவர்களுக்கு
அழகாகத் தோன்றும்படி
செய்து (அதன் மூலமாக)
அவர்கள் அனைவரையும்
வழிகெடுத்தும்
விடுவேன்.
[15:40]
அவர்களில்
அந்தரங்க - சுத்தியுள்ள
(உன்னருள் பெற்ற)
உன் நல்லடியார்களைத்
தவிர என்று கூறினான்.
[15:41]
(அதற்கு
இறைவன் "அந்தரங்க சுத்தியுள்ள
என் நல்லடியார்களின்)
இந்த வழி, என்னிடம்
(வருவதற்குரிய)
நேரான வழியாகும்.
[15:42]
நிச்சயமாக
என் அடியார்கள்
மீது உனக்கு
எவ்வித அதிகாரமும்
இல்லை - உன்னைப்
பின்பற்றி வழிகெட்டவர்களைத்
தவிர என்று
கூறினான்.
[15:43]
நிச்சயமாக
(உன்மைப் பின்பற்றும்)
அனைவருக்கும்
நரகம் வாக்களிக்கப்பட்ட
இடமாகும்.
[15:44]
அதற்கு
ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள்
ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட
(தனித்தனிப்) பிரிவினருக்கு
உரியதாகும்.
[15:45]
நிச்சயமாக
பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும்
(சுகம் பெற்று)
இருப்பார்கள்.
[15:46]
(அவர்களை
நோக்கி) "சாந்தியுடனும்,
அச்சமற்றவர்களாகவும்
நீங்கள் இதில்
நுழையுங்கள்"
(என்று
கூறப்படும்).
[15:47]
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து
குரோதத்தை நாம்
நீக்கி விடுவோம்; (எல்லோரும்)
சகோதரர்களாக ஒருவரையொருவர்
முன்னோக்கி அரியாசனங்களில்
(ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
[15:48]
அவற்றில்
அவர்களுக்கு எவ்வித சிரமமும்
ஏற்படாது அவற்றிலிருந்து
அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.
[15:49]
(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக "நிச்சயமாக
நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும்
இருக்கின்றேன்."
[15:50]
(ஆயினும்)
நிச்சயமாக என்னுடைய வேதனையும்
நோவினைமிக்கதாகவே
இருக்கும் (என்றும்
சொல்லும்).
[15:51]
இன்னும், இப்றாஹீமின் விருந்தினர்களைப்
பற்றியும் அவர்களுக்கு
அறிவிப்பீராக!