[15:52]
அவர்கள்
அவரிடம் வந்து, "உங்களுக்குச்
சாந்தி (ஸலாமுன்)
உண்டாவதாக!" என்று
சொன்ன போது அவர், "நாம்
உங்களைப்பற்றி
பயப்படுகிறோம்" என்று
கூறினார்.
[15:53]
அதற்கு
அவர்கள், "பயப்படாதீர்!
நாம் உமக்கு மிக்க
ஞானமுள்ள ஒரு மகனைப்
பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே
வந்திருக்)கின்றோம்" என்று
கூறினார்கள்.
[15:54]
அதற்கவர், "என்னை
முதுமை வந்தடைந்திருக்கும்போதா
எனக்கு நன்மாராயங்
கூறுகிறீர்கள்? எந்த
அடிப்படையில் நீங்கள்
நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள்
நற்செய்தி எதைப்பற்றியது?" எனக் கேட்டார்.
[15:55]
அதற்கவர்கள், "மெய்யாகவே, நாங்கள்
உமக்கு நன்மாராயங்
கூறினோம்; ஆகவே
நீர் (அதுபற்றி)
நிராசை கொண்டோரில் ஒருவராகி
விடாதீர்!" என்று
கூறினார்கள்.
[15:56]
வழிகெட்டவர்களைத்
தவிர, வேறெவர் தம்
இறைவனுடைய அருளைப்பற்றி
நிராசைக் கொள்வர்
என்று (இப்ராஹீம்
பதில்) சொன்னார்,
[15:57]
(அல்லாஹ்வின்)
தூதர்களே! உங்களுடைய
காரியமென்ன? என்று
(இப்றாஹீம்) கேட்டார்.
[15:58]
அதற்கவர்கள், "குற்றவாளிகளான
ஒரு கூட்டத்தாரிடம்
நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
[15:59]
லூத்தின்
கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும்
நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
[15:60]
ஆனால்
அவர் (லூத்) உடைய
மனைவியைத் தவிர
- நிச்சயமாக அவள்
(காஃபிர்களின் கூட்டத்தாரோடு)
பின்தங்கியிருப்பாள்
என்று நாம் நிர்ணயித்து
விட்டோம் என்று (வானவர்கள்)
கூறினார்கள்.
[15:61]
(இறுதியில்)
அத்தூதர்கள் லூத்துடைய
கிளையாரிடம் வந்த
போது.
[15:62]
(அவர்களை
நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத
மக்களாக நீங்கள்
இருக்கிறீர்கள்" என்று
(லூத்)
சொன்னார்,
[15:63]
(அதற்கு
அவர்கள்,) "அல்ல, (உம் கூட்டதாராகிய)
இவர்கள் எதைச்
சந்தேகித்தார்களோ, அதை நாம்
உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;
[15:64]
(உறுதியாக
நிகழவிருக்கும்) உண்மையையே
உம்மிடம் நாங்கள்
கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக
நாங்கள் உண்மையாளர்களாகவே
இருக்கிறோம்.
[15:65]
ஆகவே
இரவில் ஒரு பகுதியில் உம்முடைய
குடும்பத்தினருடன்
நடந்து சென்று
விடும்; அன்றியும்
(அவர்களை முன்னால் செல்ல
விட்டு) அவர்கள்
பின்னே நீர் தொடர்ந்து
செல்லும். உங்களில்
எவரும் திரும்பிப்
பார்க்க வேண்டாம்.
நீங்கள் ஏவப்படும்
இடத்திற்கு சென்று
விடுங்கள் என்று
அ(த் தூது)வர்கள்
கூறினார்கள்.
[15:66]
மேலும், 'இவர்கள்
யாவரும் அதிகாலையிலேயே
நிச்சயமாக வேரறுக்கப்பட்டு
விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும்
நாம் முடிவாக அவருக்கு
அறிவித்தோம்'.
[15:67]
(லூத்தின்
விருந்தினர்களாக வாலிபர்கள்
வந்திருப்பதையறிந்து)
அந் நகரத்து மக்கள்
மிக்க மகிழ்ச்சியுடன்
வந்து சேர்ந்தார்கள்.
[15:68]
(லூத் வந்தவர்களை
நோக்கி;) "நிச்சயமாக
இவர்கள் என்னுடைய
விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள்
முன்) என்னை நீங்கள்
அவமானப்படுத்தி
விடாதீர்கள்;"
[15:69]
அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள். என்னைக்
கேவலப்படுத்தி
விடாதீர்கள் என்றும்
கூறினார்.
[15:70]
அதற்கவர்கள், "உலக மக்களைப்
பற்றியெல்லாம்
(எங்களிடம் பேசுவதை
விட்டும்) நாங்கள்
உம்மைத் தடுக்கவில்லையா?" என்று
கேட்டார்கள்.