[15:91]
இந்த
குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர்
மீதும் (வேதனையை
இறக்கி வைப்போம்).
[15:92]
உம்
இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக
நாம் அவர்களனைவரையும்
விசாரிப்போம்.
[15:93]
அவர்கள்
செய்து கொண்டிருந்த (எல்லாச்)
செயல்களைப் பற்றியும், (நாம்
விசாரிப்போம்).
[15:94]
ஆதலால்
உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை
வெளிப்படையாக
அவர்களுக்கு அறிவிப்பீராக
இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!
[15:95]
உம்மை
ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக
நாமே உமக்குப்
போதுமாக இருக்கின்றோம்.
[15:96]
இவர்கள்
எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன்
வேறு தெய்வத்தையும்
(இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்; (இதன்
பலனை இவர்கள்)
பின்னர் அறிந்து
கொள்வார்கள்.
[15:97]
(நபியே!) இவர்கள்
(இழிவாகப்) பேசுவது
உம் நெஞ்சத்தை
எப்படி நெருக்குகிறது
என்பதை நாம் அறிவோம்.
[15:98]
நீர்
(அப்பேச்சைப் பொருட்படுத்தாது)
உம் இறைவனைப் புகழ்ந்து
துதிப்பீராக! ஸுஜூது
செய்(து சிரம் பணி)வோர்களில்
நீரும் ஆகிவிடுவீராக!
[15:99]
உமக்கு
மரணம் வரும்வரை
உமது இறைவனை
வணங்குவீராக!
An-Nahl
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[16:1]
அல்லாஹ்வின்
கட்டளை வந்து விட்டது
அதைப்பற்றி நீங்கள்
அவசரப்படாதீர்கள்; அவன்
மிகவும் தூயவன்
- அவர்கள் இணைவைப்பவற்றை
விட்டும் மிக்க
மேலானவன்.
[16:2]
அவன்
மலக்குகளிடம்
வஹீயைக் கொடுத்துத்
தன் அடியார்களில்
தான் நாடியவர்
மீது (அனுப்பி
வைத்து,) "நிச்சயமாக
(வணக்கத்திற்குரிய)
நாயன், என்னைத்தவிர
வேறுயாருமில்லை
ஆகையால் நீங்கள்
எனக்கே அஞ்சுங்கள்
என (மக்களுக்கு)
எச்சரிக்கை செய்யுங்கள்" என்ற கட்டளையுடன்
(மலக்குகளை) இறக்கி
வைக்கிறான்.
[16:3]
அவன்
வானங்களையும், பூமியையும் உண்மையைக்
கொண்டு படைத்துள்ளான்; அவர்கள்
இணைவைப்பவற்றை
விட்டும் அவன்
மிக்க மேலானவன்.
[16:4]
அவன்
மனிதனை இந்திரியத்துளியினால்
படைத்தான்; அப்படியிருந்தும்
மனிதன் பகிரங்கமான
எதிரியாக இருக்கின்றான்.
[16:5]
கால்
நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில்
உங்களுக்குக்
கத கதப்பு(ள்ள
ஆடையணிகளு)ம் இன்னும்
(பல) பலன்களும்
இருக்கின்றன அவற்றிலிருந்து
நீங்கள் புசிக்கவும்
செய்கிறீர்கள்.
[16:6]
அவற்றை
நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்)
திரும்பி ஓட்டி
வரும் போதும், காலை
நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும்
போதும், அவற்றில் உங்களுக்கு(ப்
பொலிவும்) அழகுமிருக்கிறது.