[16:15]
உங்களுடன்
பூமி அசையாதிருப்பதற்காக
அவன் அதன் மேல்
உறுதியான மலைகளை
நிறுத்தினான்; இன்னும் நீங்கள்
சரியான வழியை அறி(ந்து
செல்)வதற்காக அவன்
ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).
[16:16]
(வழிகாட்டும்)
அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக
அவன் அமைத்துள்ளான்)
நட்சத்திரங்களைக்
கொண்டும் (பிரயாணிகளாகிய)
அவர்கள் வழிகளை
அறிந்து கொள்கிறார்கள்.
[16:17]
(அனைத்தையும்)
படைக்கிறானே அவன், (எதையுமே)
படைக்காத (நீங்கள்
வணங்குப)வை
போலாவானா? நீங்கள்
(இதையேனும்) சிந்திக்க
வேண்டாமா?
[16:18]
இன்னும்
அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை
நீங்கள் கணக்கிட்டால், அவற்றை
(வரையறை செய்து)
நீங்கள் எண்ணி
முடியாது! நிச்சயமாக
அல்லாஹ் மிக்க
மன்னிப்பவனாகவும், மிகக்
கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
[16:19]
அன்றியும், அல்லாஹ்
நீங்கள் மறைத்து
வைத்திருப்பதையும், நீங்கள்
பகிரங்கப்படுத்துவதையும்
அறிகிறான்.
[16:20]
அல்லாஹ்வையன்றி
வேறு எவர்களை அவர்கள்
பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள்
எந்தப் பொருளையும்
படைக்க மாட்டார்கள்; அவர்(களால்
பிரார்த்திக்கப்படுபவர்)களும்
படைக்கப்பட்டவர்களாவார்கள்.
[16:21]
அவர்கள்
இறந்தவர்களே உயிருள்ளவர்களல்லர்
மேலும், எப்பொழுது
எழுப்பப்படுவார்கள்
என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
[16:22]
உங்களுடைய
நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள்
மறுமையை நம்பவில்லையே, அவர்களுடைய
நெஞ்சங்கள் (இவ்வுண்மையை)
நிராகரிப்பவையாக
இருக்கின்றன -
மேலும் அவர்கள்
(ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக
இருக்கிறார்கள்.
[16:23]
சந்தேகமின்றி
அல்லாஹ், அவர்கள் மறைத்து
வைத்திருப்பதையும்; அவர்கள்
பகிரங்கப்படுத்துவதையும்; அறிவான்; (ஆணவங் கொண்டு)
பெருமையடிப்பவர்களை
அவன் நிச்சயமாக
நேசிப்பதில்லை.
[16:24]
உங்களுடைய
இறைவன் எதை இறக்கி வைத்தான்? என்று
(குர்ஆனை குறிப்பிட்டு)
அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின்
கட்டுக்கதைகள்" என்று
அவர்கள் (பதில்)
கூறுகிறார்கள்.
[16:25]
கியாம
நாளில் அவர்கள், தங்கள் (பாவச்)
சுமைகளை முழுமையாக
சுமக்கட்டும்; மேலும்
அறிவில்லாமல்
இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய
(பாவச்) சுமைகளையும்
(சுமக்கட்டும்)
இவர்கள் (சுமக்கும்)
சுமை மிகவும் கெட்டதல்லவா?.
[16:26]
நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர்
இருந்தார்களே
அவர்களும் (இவ்வாறே)
சூழ்ச்சிகள் செய்தார்கள்; அதனால், அல்லாஹ்
அவர்களுடைய கட்டிடத்தை
அடிப்படையோடு
பெயர்த்து விட்டான்; ஆகவே அவர்களுக்கு
மேலே இருந்து முகடு
அவர்கள் மீது விழுந்தது
அவர்கள் அறிந்து
கொள்ள முடியாத
புறத்திலிருந்து
அவர்களுக்கு வேதனையும்
வந்தது.