[16:43]
(நபியே!) இன்னும்
உமக்கு முன்னர்
வஹீ கொடுத்து நாம்
அவர்களிடம் அனுப்பி
வைத்த தூதர்கள்
எல்லோரும் ஆடவரே தவிர வேறெல்லர்
ஆகவே (அவர்களை
நோக்கி) "நீங்கள்
(இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால்.
(முந்திய) வேத ஞானம்
பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று
கூறுவீராக).
[16:44]
தெளிவான
அத்தாட்சிகளையும் வேதங்களையும்
(அத்தூதர்களுக்கும்
கொடுத்தனுப்பினோம்; நபியே!)
மனிதர்களுக்கு அருளப்பட்டதை
நீர் அவர்களுக்கு
தெளிவுபடுத்துவதற்காகவும்
அவர்கள் சிந்திப்பதற்காகவும்
உமக்கு இவ்வேதத்தை
நாம் அருளினோம்.
[16:45]
தீமையான
சூழ்ச்சிகளைச் செய்யும்
அவர்களைப் பூமி
விழுங்கும்படி
அல்லாஹ் செய்யமாட்டான்
என்றோ, அல்லது அவர்கள்
அறியாப் புறத்திலிருந்து
அவர்களை வேதனை
வந்து அடையாதென்றோ
அவர்கள் அச்சந்தீர்ந்து
இருக்கின்றார்களா?
[16:46]
அல்லது
அவர்களின் போக்குவரத்தின்போதே
(அல்லாஹ்) அவர்களைப்
பிடிக்க மாட்டான்
(என்று அச்சமற்றவர்களாக
இருக்கிறார்களா? அல்லாஹ்
அவ்வாறு செய்தால்
அவனை) அவர்கள் இயலாமலாக்க
முடியாது.
[16:47]
அல்லது.
அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும்
பொழுதே (அல்லாஹ்)
அவர்களைப் பிடிக்கமாட்டான்
(என்று அச்சமற்றவர்களாக
இருக்கிறார்களா?) நிச்சயமாக
உங்கள் இறைவன்
இரக்கமுடையவன்; பெருங்
கிருபையுடையவன்.
[16:48]
அல்லாஹ்
படைத்திருக்கும் பொருட்களில்
அவர்கள் எதையுமே
(உற்றுப்) பார்க்கவில்லையா? அவற்றின்
நிழல்கள் வலமும், இடதுமாக
(ஸுஜூது செய்தவையாகச்)
சாய்கின்றன மேலும்
அவை பணிந்து (கீழ்படிதலுடன்
இவ்வாறு) அல்லாஹ்
வழிபடுகின்றன.
[16:49]
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்
- ஜீவராசிகளும், மலக்குகளும்
அல்லாஹ்வுக்கே
ஸுஜூது செய்து (சிரம்
பணிந்து) வணங்குகின்றன.
அவாகள் (ஆணவங்
கொண்டு) பெருமையடிப்பதில்லை.
[16:50]
அவர்கள்
தங்களுக்கு மேலாக இருக்கும்
(சர்வ வல்லமையுடைய)
தங்கள் இறைவனை
பயப்படுகிறார்கள்; இன்னும்
தாங்கள் ஏவப்பட்டதை
(அப்படியே) செய்கிறார்கள்.
[16:51]
இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்; இரண்டு
தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய)
அவன் ஒரே நாயன்தான்!
என்னையே நீங்கள்
அஞ்சங்கள்.
[16:52]
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை(யெல்லாம்)
அவனுக்கே (சொந்தமானவை)
அவனுக்கே (என்றென்றும்)
வழிபாடு உரியதாக இருக்கிறது
(உண்மை இவ்வாறிருக்க)
அல்லாஹ் அல்லாதவற்றையா
நீங்கள் அஞ்சகிறீர்கள்?
[16:53]
மேலும், எந்த
நிஃமத் (பாக்கியம்)
உங்களிடம் இருந்தாலும்
அது அல்லாஹ்விடமிருந்து
உள்ளதேயாகும்; பின்னர்
ஏதாவது ஒரு துன்பம்
உங்களைத் தொட்டு
விட்டால் அவனிடமே
(அதை நீக்குமாறு பிரலாபித்து)
நீங்கள் முறையிடுகிறீர்கள்.
[16:54]
பின்னர்
அவன் உங்களிடமிருந்து அத்துன்பத்தை
நீக்கிவிட்டால், உடனே
உங்களில் ஒரு பிரிவினர்
தம் இறைவனுக்கே
இணை வைக்கின்றனர்.