[16:73]
வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக
எந்த உணவையும்
கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும்
(அதற்கு) சக்திபெறாதவைகளையும்
அல்லாஹ்வை விட்டுவிட்டு
இவர்கள் வணங்குகிறார்கள்.
[16:74]
ஆகவே
நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை
கூறாதீர்கள்; நிச்சயமாக
அல்லாஹ்தான் (யாவற்றையும்
நன்கு) அறிபவன்; ஆனால்
நீங்கள் அறிய மாட்டீர்கள்.
[16:75]
அல்லாஹ்
(இருவரை) உதாரணம் கூறுகிறான்; பிறிதொருவனுக்கு
உடமைக்கப்பட்ட
எந்தப் பொருளின்
மீதும் (அதிகார) உரிமை
பெறாத ஓர் அடிமை
மற்றொருவனோ, நம்மிடமிருந்து
அவனுக்கு நல்ல
உணவு(ம் மற்றும்)
பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும்
அவற்றிலிருந்து இரகசியமாகவும்
பகிரங்கமாகவும்
(நம் வழியில்) செலவு
செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து
லில்லாஹ் (புகழ்
எல்லாம் அல்லாஹ்வுக்கே)
- என்றாலும் அவர்களில்
பெரும் பாலோர்
(இதனை) அறிந்து
கொள்வதில்லை.
[16:76]
மேலும், அல்லாஹ்
இரு மனிதர்களைப்
பற்றிய (மற்றும்)
ஓர் உதாரணம் கூறுகிறான்; அவ்விருவரில்
ஒருவன் ஊமை(யான
அடிமை) எந்தப்
பொருளின் மீது
(உரிமையும்) சக்தியும்
அற்றவன்; தன் எஜமானனுக்குப்
பெரும் சுமையாகவும்
அவன் இருக்கின்றான்; எங்கு
அவனை அனுப்பினாலும் அவன்
யாதொரு நன்மையும்
கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும்
நேர் வழியிலிருந்து, (பிறரையும்
நன்மை செய்யுமாறு)
நீதியைக் கொண்டு
ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்)
சமமாவானா?
[16:77]
மேலும், வானங்களிலும், பூமியிலும்
உள்ள இரகசியம்
அல்லாஹ்வுக்கே
உரியது ஆகவே, (இறுதித்
தீர்ப்புக்குரிய) வேலையின்
விஷயம் இமை கொட்டி
விழிப்பது போல்
அல்லது (அதைவிட)
சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக
அல்லாஹ் எல்லாப்
பொருட்களின் மீதும்
பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான.
[16:78]
உங்கள்
மாதாக்களின் வயிறுகளிலிருந்து
நீங்கள் ஒன்றுமே
அறியாதவர்களாக
இருந்த நிலையில்
உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும்
உங்களுக்குச்
செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும்
- நீங்கள் நன்றி
செலுத்தும் பொருட்டு
- அவனே அமைத்தான்.
[16:79]
வான(மண்டல)த்தின்
(காற்று) வெளியில்
(இறை கட்டளைக்குக்)
கட்டுப்பட்டு
பறக்கும் பறவைகளை
இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை
(ஆகாயத்தில்) தாங்கி
நிற்பவன் அல்லாஹ்வைத்
தவிர வேறு எவருமில்லை
நிச்சயமாக இதில்
ஈமான் கொண்ட மக்களுக்கு(த்
தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.