[16:103]
நிச்சயமாக
அவருக்கு கற்றுக் கொடுப்பவன்
ஒரு மனிதனே, (இறைவனல்லன்)
என்று அவர்கள்
கூறுவதை திடமாக
நாம் அறிவோம்; எவனைச்
சார்ந்து அவர்கள்
கூறுகிறார்களோ, அவனுடைய
மொழி (அரபியல்லது) அன்னிய
மொழியாகும்; ஆனால், இதுவோ
தெளிவான அரபி மொழியாகும்.
[16:104]
நிச்சயமாக
எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை
நம்பவில்லையோ, அல்லாஹ்
அவர்களுக்கு நேர்வழி
காட்டமாட்டான்; இன்னும் அவர்களுக்கு
நோவினை செய்யும்
வேதனையுமுண்டு.
[16:105]
நிச்சயமாக
பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம்
அல்லாஹ்வின் வசனங்களை
நம்பாதவர்கள்
தாம்; இன்னும் அவர்கள்
தாம் பொய்யர்கள்.
[16:106]
எவர்
ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை
நிராகரிக்கிறாரோ
அவர் (மீது அல்லாஹ்வின்
கோபம் இருக்கிறது)
அவருடைய உள்ளம்
ஈமானைக் கொண்டு
அமைதி கொண்டிருக்கும்
நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ
அவரைத் தவிர - (எனவே
அவர் மீது குற்றமில்லை)
ஆனால் (நிர்ப்பந்தம்
யாதும் இல்லாமல்)
எவருடைய நெஞ்சம்
குஃப்ரைக்கொண்டு
விரிவாகி இருக்கிறதோ
இத்தகையோர் மீது
அல்லாஹ்வின் கோபம்
உண்டாகும்; இன்னும்
அவர்களுக்குக் கொடிய
வேதனையும் உண்டு.
[16:107]
ஏனென்றால், நிச்சயமாக
அவர்கள் மறுமையைவிட
இவ்வுலக வாழ்க்கையையே
அதிகமாக நேசிக்கிறார்கள்; மேலும், நிச்சயமாக அல்லாஹ்
காஃபிர்களின்
கூட்டத்தாரை நேர்வழியில்
செலுத்த மாட்டான்.
[16:108]
அத்தகையோருடைய
இதயங்கள், செவிப்புலன், பார்வைகள்
(ஆகியவற்றின்)
மீது அல்லாஹ் முத்திரையிட்டு
விட்டான். இவர்கள்
தான் (தம் இறுதி
பற்றி) பராமுக
அலட்சியமாகயிருப்பவர்கள்.
[16:109]
சந்தேகமின்றி, இவர்கள் மறுமையில்
முற்றிலும் நஷ்டமடைவார்கள்.
[16:110]
இன்னும்
எவர்கள் (துன்பங்களுக்கும்)
சோதனைகளுக்கும்
உட்படுத்தப்பட்டபின்
(தம் வீடுகளைத்
துறந்து) ஹிஜ்ரத்
செய்து (வெளிக்கிளம்பினார்களோ), பின்பு
அறப்போர் புரிந்தார்களோ
இன்னும் பொறுமையைக்
கையாண்டார்களோ, அவர்களுக்கு
(உதவி செய்ய) நிச்சயமாக
உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப்
பின்னரும், உம்முடைய
இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும்
இருக்கின்றான்.