[17:39]
இவையெல்லாம்
உம்முடைய இறைவன் உமக்கு
வஹீ (மூலம்) அறிவித்துள்ள
ஞான உபதேசங்களாகும்.
ஆகவே அல்லாஹ்வுடன்
வேறு நாயனை
(இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச்
செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும்
துரத்தப்பட்டவராகவும்
நரகத்தில் எறியப்படுவீர்.
[17:40]
(முஷ்ரிக்குகளே!) உங்கள் இறைவன்
உங்களுக்கு ஆண்
மக்களை அளித்து
விட்டு (தனக்கு
மட்டும்) மலக்குகளிலிருந்து
பெண் மக்களை எடுத்துக்கொண்டானா? நிச்சயமாக
நீங்கள் மிகப்பெரும்
(பொய்க்) கூற்றையே
கூறுகிறீர்கள்.
[17:41]
இன்னும்
அவர்கள் (சிந்தித்துப்)
படிப்பினைகள்
பெறுவதற்காக இந்த
குர்ஆனில் திட்டமாக(ப்
பல்வேறு) விளக்கங்களைக்
கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்)
அவர்களுக்கு (உண்மையிலிருந்து)
வெறுப்பைத் தவிர
(வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை!
[17:42]
(நபியே!) நீர்
சொல்வீராக அவர்கள்
கூறுவதுபோல் அவனுடன்
வேறு தெய்வங்கள்
இருந்தால், அப்போது
அவை அர்ஷுடையவன்
(அல்லாஹ்
தஆலாவின்) அளவில்
ஒரு வழியைத் தேடிக்கண்டு
பிடித்துச் (சென்று)
இருக்கும் என்று
[17:43]
அவன்
மிகவும் பரிசத்தமானவுன்; இன்னும்
அவர்கள் கூறும்
கூற்றுக்களை விட்டு
அப்பாற்பட்டவனாக
இருக்கின்றான்.
[17:44]
ஏழு
வானங்களும், பூமியும், அவற்றில்
உள்ளவர்களும்
அவனைத் துதி செய்து
கொண்டிருக்கின்றனர்; இன்னும்
அவன் புகழைக்
கொண்டு துதி செய்யாத
பொருள் (எதுவும்)
இல்லை. எனினும்
அவற்றின் துதி செய்வதை
நீங்கள் உணர்ந்து
கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக
அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும்
இருக்கின்றான்.
[17:45]
(நபியே!) நீர்
குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும்
மறுமையின் மீது
ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள
ஒரு திரையை அமைத்து
விடுகிறோம்.
[17:46]
இன்னும், அவர்கள்
அதனை விளங்கிக்
கொள்வதை விட்டும்
அவர்களுடைய இருதயங்களின்
மேல் மூடிகளையும், அவர்களுடைய
காதுகளின் மீது
செவிட்டுத்தனத்தையும்
நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும்
குர்ஆனில், உம்முடைய
இறைவன் ஒருவனை
மட்டும் நீர் குறிப்பிடும்
போது, அவர்கள் வெறுப்படைந்து
தம் பின்புறங்களில்
(திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி
விடுகிறார்கள்.
[17:47]
(நபியே!) அவர்கள்
உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன்
செவி சாய்க்கின்றார்கள்
என்பதையும் அவர்கள் தமக்குள்
இரகசியமாக ஆலோசனை
செய்யும் போது, "சூனியம்
செய்யப்பட்ட ஒரு மனிதரையே
அன்றி (வேறெவரையும்)
நீங்கள் பின்பற்றிவில்லை" என்று (தங்களுக்குள்)
அந்த அநியாயக்காரர்கள்
சொல்வதையும் நாம்
நன்கறிவோம்.
[17:48]
(நபியே!) உமக்கு
அவர்கள் எத்தகை
உவமைகளைச் சொல்கிறார்கள்
என்பதை கவனித்துப்பாரும்!
ஆகவே, அவர்கள் வழிகெட்டு
விட்டார்கள்; (நேரான)
வழிக்கு அவர்கள்
சக்திப்பெற மாட்டார்கள்.
[17:49]
இன்னும்; "(இறந்து
பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும்
நாங்கள் ஆகிவிட்ட
பிறகு, நிச்சயமாக
புதிய படைப்பாக
நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?" என்றும்
அவர்கள் கேட்கிறார்கள்.