[17:50]
(நபியே!) நீர்
கூறும்; "நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ
ஆகுங்கள்.
[17:51]
அல்லது
மிகப் பெரிதென
உங்கள் நெஞ்சங்களில்
தோன்றும் வேறொரு
படைப்பாய் ஆகுங்கள்; (எப்படியானாலும்
நீங்கள் நிச்சயமாக
எழுப்பப்படுவீர்கள்). "எங்களை எவன்
(மறுமுறையும் உயிர்
கொடுத்து) மீட்டுவான்?"
என்று
அவர்கள் கேட்பார்கள்.
"உங்களை
எவன் முதலில் படைத்தானோ,
அவன்
தான்!" என்று (நபியே!) நீர்
கூறும்; அப்போது
அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம்
பக்கம் சாய்த்து,
(பரிகாசமாக)
அது எப்போது (நிகழும்)?
என்று கேட்பார்கள். "அது வெகு
சீக்கிரத்திலும்
ஏற்படலாம்" என்று
கூறுவீராக!
[17:52]
உங்களை
(இறுதியில்) அவன் அழைக்கும்
நாளில், நீங்கள் அவன்
புகழை ஓதியவர்களாக
பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப்
பின்) சொற்ப(கால)மே
தங்கியிருந்ததாக
நீங்கள் நினைப்பீர்கள்.
[17:53]
(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள்
அழகியதையே சொல்ல
வேண்டும் என்று
கூறுவீராக! நிச்சயமாக
ஷைத்தான் அவர்களுக்கிடையில்
(தீயதைத் தூண்டி)
விஷமஞ் செய்வான்; நிச்சயமாக
ஷைத்தான் மனிதனுக்குப்
பகிரங்கமான பகைவனாக
இருக்கின்றான்.
[17:54]
உங்களுடைய
இறைவன் உங்களைப் பற்றி
நன்கறிவான்; அவன்
நாடினால் உங்களுக்கு
கிருபை செய்வான்; அல்லது
அவன் நாடினால்
உங்களை வேதனை செய்வான்; நாம்
உம்மை அவர்களுக்கு
வகீலாக (பொறுப்பாளியாக) அனுப்பவில்லை.
[17:55]
உம்முடைய
இறைவன் வானங்களிலிம் பூமியிலும்
உள்ளவர்களைப்
பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில்
சிலரை வேறு சிலரைவிடத்
திட்டமாக நாம்
மேன்மையாக்கியிருக்றோம்; இன்னும்
தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்)
கொடுத்தோம்.
[17:56]
அவனையன்றி
(வேறு தெய்வங்கள் இருப்பதாக)
நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை
அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய
கஷ்டத்தை நிவர்த்திக்கவோ
அல்லது திருப்பிவிடவோ
சக்தி பெறவில்லை (என்பதை
அறிவீர்கள்).
[17:57]
(அல்லாஹ்வையன்றி)
இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ
அவர்கள், ஏன் அவர்களில்
மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள்
கூட தங்கள் இறைவன்பால்
(கொண்டு செல்ல)
நற்கருமங்களை
செய்து கொண்டும்
அவனது அருளை எதிர்பார்த்தும்
அவனது தண்டனைக்கு
அஞ்சியுமே இருக்கின்றனர்.
நிச்சயமாக உமது
இறைவனின் தண்டனை
அச்சப்படத் தக்கதாகவே
உள்ளது.
[17:58]
இன்னும்
கியாம நாளைக்கு
முன்னே (அழிச்சாட்டியம்
செய்யும்) எந்த
ஊராரையும் நாம்
அழிக்காமலோ, அல்லது
கடுமையான வேதனைக்
கொண்டு வேதனை செய்யாமலோ
இருப்பதில்லை
இது(லவ்ஹுல் மஹ்ஃபூள்
என்னும்) ஏட்டில்
வரையப்பெற்றே
இருக்கிறது.