[2:187]
நோன்புக்
கால இரவில் நீங்கள் உங்கள்
மனைவியருடன் கூடுவது
உங்களுக்கு அனுமதிக்கப்
பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு
ஆடையாகவும், நீங்கள்
அவர்களுக்கு ஆடையாகவும்
இருக்கின்றீர்கள்;. நீங்கள்
இரகசியமாகத் தம்மைத்
தாமே வஞ்சித்துக்
கொண்டிருந்ததை
அல்லாஹ் நன்கறிவான்;. அவன்
உங்கள் மீது இரக்கங்கொண்டு
உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு
இரவுகளில்) உங்கள்
மனைவியருடன் கூடி
அல்லாஹ் உங்களுக்கு
விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும்
ஃபஜ்ரு (அதிகாலை)நேரம்
என்ற வெள்ளை நூல்(இரவு
என்ற) கருப்பு
நூலிலிருந்து
தெளிவாகத் தெரியும்
வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு
வரும் வரை நோன்பைப்
பூர்த்தி செய்யுங்கள்; இன்னும்
நீங்கள் பள்ளிவாசலில் தனித்து
(இஃதிகாஃபில்)
இருக்கும் போது, உங்கள்
மனைவியருடன் கூடாதீர்கள்
- இவையே அல்லாஹ்
விதித்த வரம்புகளாகும்;. அந்த
வரம்புகளை(த் தாண்ட)
முற்படாதீர்கள்;. இவ்வாறே
(கட்டுப்பாடுடன்)
தங்களைக்காத்து
பயபக்தியுடையோர்
ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய
சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
[2:188]
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர்
மற்றவரின் பொருளைத்
தவறான முறையில்
சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து
கொண்டே பிற மக்களின்
பொருள்களிலிருந்து(எந்த)
ஒரு பகுதியையும், அநியாயமாகத்
தின்பதற்காக அதிகாரிகளிடம்
(இலஞ்சம் கொடுக்க)
நெருங்காதீர்கள்.
[2:189]
(நபியே!
தேய்ந்து, வளரும்) பிறைகள்
பற்றி உம்மிடம்
கேட்கிறார்கள்; நீர் கூறும்; "அவை மக்களுக்குக் காலம்
காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும்
அறிவிப்பவையாகவும்
உள்ளன. (முஃமின்களே!
ஹஜ்ஜை நிறைவேற்றிய
பிறகு உங்கள்)
வீடுகளுக்குள்
மேற்புறமாக வருவதில்
புண்ணியம் (எதுவும் வந்து
விடுவது) இல்லை, ஆனால்
இறைவனுக்கு அஞ்சி
நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள்
(முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள்
வெற்றியடையும்
பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி
நடந்து கொள்ளுங்கள்.
[2:190]
உங்களை
எதிர்த்துப் போர் புரிபவர்களுடன்
நீங்களும், அல்லாஹ்வின்
பாதையில் போரிடுங்கள்; ஆனால்
வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக
அல்லாஹ் வரம்பு
மீறுபவர்களை நேசிப்பதில்லை.