[17:76]
(நபியே!) உம்மை
(உம்முடைய) பூமியிலிருந்து
அடி பெயரச்செய்து, அதை விட்டும்
உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால்
அவர்களோ உமக்குப்பின்னர்
சொற்ப நாட்களேயன்றி
(அங்கு) தங்கியிருக்க
மாட்டார்கள்.
[17:77]
திடமாக, உமக்கு
முன்னர் நாம் அனுப்பிய
நம் தூதர்களைப்
பொறுத்தும் இது
வழிமுறையாக இருந்து
வந்தது நம்முடைய (இவ்)வழிமுறையில்
எந்த மாற்றத்தையும்
நீர் காணமாட்டீர்.
[17:78]
(நபியே!) சூரியன்
(உச்சியில்) சாய்ந்ததிலிருந்து
இரவின் இருள் சூழும்
வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை
நிலை நிறுத்துவீராக
இன்னும் ஃபஜ்ருடைய
தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக
ஃபஜ்ரு தொழுகை
சான்று கூறுவதாகயிருக்கிறது.
[17:79]
இன்னும்
இரவில் (ஒரு சிறு) பகுதியில்
உமக்கு உபரியான
தஹஜ்ஜத் தொழுகையைத்
தொழுது வருவீராக
(இதன் பாக்கியத்தினால்)
உம்முடைய இறைவன், 'மகாமம்
மஹ்முதா' என்னும்
(புகழ் பெற்ற) தலத்தில்
உம்மை எழுப்பப்
போதும்.
[17:80]
என்
இறைவனே! என்னை
சிறந்த முறையில்
நுழையச் செய்வாயாக!
மேலும் சிறந்த
முறையில் என்னை
வெளிப்படுத்துவாயாக!
மேலும் உன்புறத்திலிருந்து
எனக்கு உதவி
செய்யும் ஒரு சக்தியை
ஆக்குவாயாக! என்று
கூறுவீராக.
[17:81]
(நபியே!) இன்னும், சத்தியம்
வந்தது அசத்தியம்
அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது
அழிந்து போவதேயாகும்' என்று
கூறுவீராக.
[17:82]
இன்னும், நாம்
முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும்
உள்ளவற்றையே குர்ஆனில்
(படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால்
அக்கிரமக்காரர்களுக்கோ
இழப்பைத் தவிர
வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
[17:83]
நாம்
மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால்
அவன் (நன்றி செலுத்தாமல்)
புறக்கணித்து(த்
தோளை உயர்த்திப்)
பெருமை கொள்கிறான்; அவனை
(ஏதேனுமொரு) தீங்கு
தொடுமானால் அவன்
நிராசை கொண்டவனாகி விடுகிறான்.
[17:84]
(நபியே!) நீர்
கூறுவீராக "ஒவ்வொருவனும்
தன் வழியிலேயே
செயல் படுகிறான்; ஆனால்
நேரான வழியில் செல்பவர்
யார் என்பதை உங்கள்
இறைவன் நன்கு அறிவான்."
[17:85]
(நபியே!) "உம்மிடம்
ரூஹை (ஆத்மாவைப்)
பற்றி அவர்கள்
கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே
உண்டானது இன்னும்
ஞானத்திலிருந்து
உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச்
சொற்பமேயன்றி
வேறில்லை" எனக் கூறுவீராக.
[17:86]
(நபியே!) நாம்
நாடினால் உமக்கு நாம் வஹீயாக
நாம் அறிவித்ததை
(குர்ஆனை)
போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப்
பொறுப்பேற்கக்
கூடிய எவரையும்
நீர் காணமாட்டீர்.