[17:87]
ஆனால்
உம் இறைவனுடைய ரஹ்மத்தைத்
தவிர (இவ்வாறு
நிகழாமல் இருப்பதற்கு
வேறெதுவுமில்லை)
நிச்சயமாக உம் மீது
அவனுடைய அருட்கொடை
மிகப் பெரிதாகவே
இருக்கிறது.
[17:88]
இந்த
குர்ஆனை போன்ற
ஒன்றைக் கொண்டுவருவதற்காக
மனிதர்களும் ஜின்களும்
ஒன்று சேர்ந்து
(முயன்று), அவர்களில் ஒரு சிலர்
சிலருக்கு உதவிபுரிபவர்களாக
இருந்தாலும், இது போன்ற
ஒன்றை அவர்கள் கொண்டு
வரமுடியாது என்று
(நபியே) நீர் கூறும்.
[17:89]
நிச்சயமாக, இந்த
குர்ஆனில் மனிதர்களுக்காக
சகலவிதமான உதாரணங்களையும்
(மிகவும் தெளிவாக)
விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில்
மிகுதியானவர்கள்
(இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.
[17:90]
இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்; "நீர்
எங்களுக்காகப்
பூமியிலிருந்து
ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு
வரும்படி செய்யும்
வரையில், உம் மீது
நாங்கள் நம்பிக்கை
கொள்ள மாட்டோம்.
[17:91]
அல்லது
பேரீச்சை மரங்களும், திராட்சைக்
கொடிகளும் (நிரப்பி)
உள்ள தோட்டம்
ஒன்று உமக்கு இருக்க
வேண்டும். அதன்
நடுவே ஆறுகளை நீர்
ஒலித்தோடச் செய்ய வேண்டும்.
[17:92]
அல்லது
நீர் எண்ணுவது
போல் வானம் துண்டு
துண்டாக இடிந்து
எங்கள் மேல் விழச் செய்யும்
வரை அல்லது அல்லாஹ்வையும்
மலக்குகளையும்
(நமக்குமுன்) நேருக்கு
நேராகக் கொண்டு
வந்தாலன்றி.
[17:93]
அல்லது
ஒரு தங்கமாளிகை
உமக்கு இருந்தாலன்றி
(உம் மீது நம்பிக்கை
கொள்ளோம்) அல்லது
வானத்தின் மீது
நீர் ஏறிச் செல்ல
வேண்டும், (அங்கிருந்து)
எங்களுக்காக நாங்கள்
படிக்கக் கூடிய
ஒரு (வேத) நூலை
நீர் கொண்டு வந்து
தரும் வரையில், நீர்
(வானத்தில்) ஏறியதையும்
நாங்கள் நம்ப மாட்டோம்
என்று கூறுகின்றனர். "என் இறைவன்
மிகத் தூயவன்,
நான்
(இறைவனுடைய) தூதனாகிய ஒரு
மனிதனே தவிர வேறெதுவுமாக
இருக்கின்றேனா?"
என்று
(நபியே! நீர் பதில்) கூறுவீராக.
[17:94]
மனிதர்களிடம்
நேர்வழி (காட்டி) வந்த
போது, "ஒரு மனிதரையா
அல்லாஹ் (தன்) தூதராக
அனுப்பினான்" என்று கூறுவதைத்
தவிர அவர்கள் ஈமான்
கொள்வதை வேறெதுவும்
தடுக்கவில்லை.
[17:95]
(நபியே!) நீர்
கூறும்; "பூமியில்
மலக்குகளே வசித்து
(இருந்து
அதில்) அவர்களே
நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக
நாம் அவர்களிடம்
ஒரு மலக்கையே வானத்திலிருந்து
(நம்) தூதராக
இறக்கியிருப்போம்" என்று.
[17:96]
எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும்
சாட்சியாக இருக்க
அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக
அவன் தன் அடியார்களைப்
பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்)
பார்ப்பவனாகவும் இருக்கின்றான்
என்று (நபியே!) நீர்
கூறுவீராக.