[18:5]
அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய
மூதாதையர்களுக்கோ
இதைப் பற்றி எவ்வித
அறிவாதாரமுமில்லை
அவர்களுடைய வாய்களிலிருந்து
புறப்படும் (இந்த)
வார்த்தை பெரும்
பாபமானதாகும்; அவர்கள் கூறுவது
பொய்யேயன்றி வேறில்லை.
[18:6]
(நபியே!) இந்த
(வேத) அறிவிப்பில்
அவர்கள் நம்பிக்கை
கொள்ளாவிட்டால், அவர்களுக்காக
வியாகூலப்பட்டு, நீர் உம்மையே
அழித்துக் கொள்வீர்கள்
போலும்!
[18:7]
(மனிதர்களில்
அழகிய செயலுடையவர்கள்
யார் என்று அவர்களைச்
சோதிப்பதற்காக, நிச்சயமாக
பூமியிலுள்ளவற்றை அதற்கு
அலங்காரமாக நாம்
ஆக்கினோம்.
[18:8]
இன்னும், நிச்சயமாக
நாம் அதன் மீது
உள்ளவற்றை (ஒரு
நாள் அழித்துப்)
புற்பூண்டில்லாப்
பாலைநிலமாக்கி
விடுவோம்.
[18:9]
(அஸ்ஹாபுல்
கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப்
பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய
ஆச்சரியமான அத்தாட்சிகளில்
நின்றும் உள்ளவர்கள்
என எண்ணுகிறீரோ,
[18:10]
அந்த
இளைஞர்கள் குகையினுள் தஞ்சம்
புகுந்த போது அவர்கள் "எங்கள்
இறைவா! நீ உன்னிடமிருந்து
எங்களுக்கு ரஹ்மத்தை
அருள்வாயாக! இன்னும்
நீ எங்களுக்காக
எங்கள் காரியத்தை(ப்
பலனுள்ள தாக)ச்
சீர்திருத்தித்
தருவாயாக!" என்று
கூறினார்கள்.
[18:11]
ஆகவே
நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள்
வரை அக்குகையில்
(தூங்குமாறு) அவர்களுடைய
காதுகளின் மீது (திரையிட்டுத்)
தடையேற்படுத்தினோம்.
[18:12]
பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த)
இருபிரிவினர்களில்
எப்பிரிவினர், தாங்கள்
(குகையில்) தங்கியிருந்த கால அளவை
நன்கு அறிந்திருந்தார்கள்
என்பதைச் சோதிப்பதற்காக
அவர்களை நாம் எழுப்பினோம்.
[18:13]
(நபியே!) நாம்
உமக்கு அவர்களுடைய
வரலாற்றை உண்மையைக்
கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக
அவர்கள் இளைஞர்கள்
- தங்கள் இறைவன்
மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும்
நாம் அவர்களை நேர் வழியில்
அதிகப்படுத்தினோம்.
[18:14]
அவர்கள்
(கொடுமைக்கார அரசன் முன்னிலையில்)
எழுந்து நின்று "வானங்களுக்கும், பூமிக்கும்
இறைவனாகிய அவனே, எங்களுடைய
இறைவன்; எக்காலத்தும்
அவனையன்றி வேறு
எவரையும் நாயனென்று
அழைக்க மாட்டோம்; (அப்படிச்
செய்தால் குஃப்ரில்
கொண்டு சேர்க்கும்)
- வரம்பு மீறியதைச்
சொன்னவர்கள் ஆவோம்" என்று
அவர்கள் உறுதியாகக்
கூறிய நிலையில்
அவர்கள் இதயங்களை
நாம் வலுப்படுத்தினோம்.
[18:15]
எங்கள்
சமூகத்தாராகிய
அவர்கள் அவனையன்றி
வேறு நாயனை ஏற்றுக்
கொண்டிருக்கிறார்கள்; அவர்கள்
அவற்றின் மீது தெளிவான
அத்தாட்சியைக்
கொண்டு வரவேண்டாமா? ஆகவே
அல்லாஹ்வின் மீது
பொய்யாக இட்டுக்
கட்டுபவனை விட
அநியாயக்காரன்
யார்? (என்றும் கூறினார்கள்).