[18:35]
(பெருமையினால்)
தன் ஆத்மாவுக்குத்
தீங்கிழைத்தவனாக
தன் தோட்டத்திற்குள்
நுழைந்தான்; அவன், "இந்த(த் தோட்டம்)
எப்பொழுதாவது
அழிந்துவிடும்
என்று நான் எண்ணவில்லை" என்றும்
கூறிக் கொண்டான்.
[18:36]
(நியாயத்
தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும்
என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி
ஏதும் நிகழ்ந்து)
நான் என் இறைவனிடம்
மீண்டும் கொண்டு
செல்லப்படுவேனாயின், நிச்சயமாக
இங்கிருப்பதைவிட
மேலான இடத்தையே
நான் காண்பேன்" என்றும்
கூறினான்.
[18:37]
அவனுடைய
தோழன் அவனுடன்
(இது பற்றித்)
தர்க்கித்தவனாக "உன்னை
மண்ணிலிருந்தும், பின்
ஒரு துளி இந்திரியத்திலிருந்தும்
படைத்து, பின்பு
உன்னைச் சரியான
மனிதனாக ஆக்கினானே அவனையா
நீ நிராகரிக்கின்றாய்?" என்று
அவனிடம் கேட்டான்.
[18:38]
ஆனால், (நான்
உறுதி சொல்கிறேன்;) அல்லாஹ்
- அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு
நான் யாரையும்
இணை வைக்கவும்
மாட்டேன் -
[18:39]
மேலும், நீ உன்
தோட்டத்தில் நுழைந்தபோது
'மாஷா
அல்லாஹு; லா குவ்வத்த
இல்லா பில்லாஹ்' - அல்லாஹ்
நாடியதே நடக்கும்; அனைத்து
சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை
- என்று கூறியிருக்க
வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும்
நான் உன்னைவிடக்
குறைந்தவனாக இருப்பதாய்
நீ கண்ட போதிலும்
-
[18:40]
உன்னுடைய
தோட்டத்தைவிட
மேலானதை என் இறைவன்
எனக்குத் தரவும்
(உன் தோட்டத்தின்
மீது) வானத்திலிருந்தும்
இடிகளை அனுப்பி
அதை அதனால் மழுமட்டையான திடலாக
ஆக்கி விடவும்
போதும்.
[18:41]
அல்லது
அதன் நீர் முழுதும்
உறிஞ்சப்பட்டதாகி
- அதை நீ தேடிக்கண்டு
பிடிக்க முடியாதபடியும்
ஆகிவிடலாம்" என்று
கூறினான்.
[18:42]
அவனுடைய
விளைபொருட்கள் அழிக்கப்பட்டன.
அதற்காக தான் செலவு
செய்ததைக் குறித்து
(வருந்தியவனாக)
இரு கைகளையும்
பிசைந்து கொண்டிருந்தான்.
அ(த்தோட்டமான)து
வேரோடு சாய்ந்து கிடக்கின்றது.
(இதனைப் பார்த்த)
அவன் "என் இறைவனுக்கு
எவரையும் நான்
இணை வைக்காமல்
இருந்திருக்க
வேண்டுமே!" என்று
கூறினான்.
[18:43]
மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு
உதவி செய்யும்
கூட்டத்தார் எவரும்
அவனுக்கு இருக்கவில்லை
ஆகவே, அவன் (இவ்வுலகில்)
எவராலும் உதவி
செய்யப்பட்டவனாக
இல்லை.
[18:44]
அங்கே
உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே
உரியது, அவன் கூலி
வழங்குவதிலும்
மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும்
மிக்க மேலானவன்.
[18:45]
மேலும், இவ்வுலக
வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு
(நபியே!) நீர் கூறுவீராக! "அது நாம் வானத்திலிருந்து
இறக்கி வைத்த நீரைப்
போலிருக்கிறது
பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன்
கலந்(து செழித்)தன்
ஆனால் அவை காய்ந்து, பதராகி
அவற்றைக் காற்று அடித்துக்
கொண்டு போய் விடுகிறது
- மேலும், எல்லாப்
பொருளின் மீதும்
அல்லாஹ் ஆற்றலுடையவனாக
இருக்கின்றான்.