[18:62]
அவ்விருவரும், அப்புறம்
அந்த இடத்தைக்
கடந்த போது, தம் பணியாளை
நோக்கி, "நம்முடைய
காலை ஆகாரத்தைக் கொண்டுவா
இந்த நம் பிரயாணத்தில்
நிச்சயமாக நாம்
களைப்பைச் சந்திக்கிறோம்" என்று
(மூஸா) கூறினார்.
[18:63]
அதற்கு "அக்கற்பாறையில் நாம்
தங்கிய சமயத்தில்
நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக
நாம் மீனை மறந்து விட்டேன்." மேலும், அதை (உங்களிடம்)
சொல்வதை ஷைத்தானையன்றி
(வேறு எவனும்) என்னை
மறக்கடிக்கவில்லை; மேலும்
அது கடலுக்குள்
தன் வழியை ஆச்சரியமாக
அமைத்துக் கொண்டது!" என்று
பணியாள் கூறினார்.
[18:64]
(அப்போது)
மூஸா, "நாம் தேடிவந்த
(இடம் அ)துதான்" என்று
கூறி, இருவரும் தம்
காலடிச் சுவடுகளைப் பின்பற்றி
(வந்தவழியே) திரும்பிச்
சென்றார்கள்.
[18:65]
(இவ்வாறு)
அவ்விருவரும்
நம் அடியார்களில்
ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு
நம்மிடமிருந்து
கிருபை அருளியிருந்தோம்; இன்னும்
நாம் அவருக்கு
நம்மிடமிருந்து
கல்வி ஞானத்தையும் கற்றுக்
கொடுத்திருந்தோம்.
[18:66]
உங்களுக்குக்
கற்றுக் கொடுக்கப்பட்ட
நன்மையானவற்றை
நீங்கள் எனக்குக் கற்பிக்கும்
பொருட்டு, உங்களை
நான் பின் தொடரட்டுமா? என்று
அவரிடம் மூஸா கேட்டார்.
[18:67]
(அதற்கவர்,) நிச்சயமாக
நீர் என்னுடன்
பொறுமையாக இருக்க
இயலமாட்டீர்!" என்று
கூறினார்.
[18:68]
(ஏனெனில்)
எதைப் பற்றி உமக்கு முழுமையான
ஞானம் இல்லையோ, அதில்
நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!
(என்று கேட்டார்.)
[18:69]
(அதற்கு)
மூஸா, "இன்ஷா அல்லாஹ்! நான்
பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும்
உமக்கு மாறு செய்யாதவனாகவும்
நான் இருப்பதை
நீங்கள் விரைவில்
காண்பீர்கள்" என்று
(மூஸா) சொன்னார்.
[18:70]
(அதற்கு
அவர்) "நீர் என்னைப்பின்
தொடர்வதாயின்,
எந்த
ஒரு விஷயத்தைப்
பற்றியும் - நானாகவே
அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும்
வரை - நீர் என்னிடம்
கேட்கக் கூடாது"
என்று
சொன்னார்.
[18:71]
பின்னர்
இருவரும் ஒரு மரக்கலத்தில்
ஏறும் வரையில்
நடந்து சென்றனர், (மரக்கலம்
கடலில் செல்லலானதும்;) அவர்
அதில் ஓர் ஓட்டையைப்
போட்டார்; "இதிலுள்ளவர்களை
மூழ்கடிக்கவா
நீங்கள் இதில்
ஓர் ஓட்டையைப்
போட்டீர்கள்? நிச்சயமாக
நீங்கள் ஓர் (அபாயகரமான)
பெருங் காரியத்தைச்
செய்துவிட்டீர்கள்" என்று
(மூஸா) கூறினார்.
[18:72]
(அதற்கு
அவர்,) "நிச்சயமாக
நீர் என்னுடன்
பொறுமையைக் கடைப்பிடிக்க
முடியாது என்று
உமக்கு நான் சொல்லவில்லையா?
என்றார்.
[18:73]
நான்
மறந்து விட்டதைப்
பற்றி நீங்கள்
என்னை(க் குற்றம்)
பிடிக்க வேண்டாம்; இன்னும்
என் காரியத்தைச் சிரமமுடையதாக
ஆக்கி விடாதீர்கள்
என்று (மூஸா) கூறினார்.
[18:74]
பின்னர்
(மரக்கலத்திலிருந்து இறங்கி)
இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்)
ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த
போது, அவர் அவனைக்
கொன்று விட்டார்.
(உடனே மூஸா) "கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான
ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள்
பெருத்தக் கேடான
ஒரு காரியத்தையே
செய்து விட்டீர்கள்!" என்று (மூஸா)
கூறினார்.