[18:75]
(அதற்கு
அவர்) "நிச்சயமாக நீர் என்னுடன்
பொறுமையாக இருக்க
இயலாது என்று உமக்கு
நாம் சொல்லவில்லையா?"
என்று
கூறினார்.
[18:76]
இதன்
பின்னர் நான் எந்த விஷயத்தைப்
பற்றியாவது உங்களிடம்
கேட்பேனாயின்
நீங்கள் உங்கள்
தோழனாக வைத்துக் கொள்ள
வேண்டாம் - நிச்சயமாக
நீங்கள் என்னிடமிருந்து
தக்க மன்னிப்புக்
கோருதலைப் பெற்றுக்
கொண்டீர்கள்" என்று
கூறினார்.
[18:77]
பின்னர்
அவ்விருவரும்
வழி நடந்து, இருவரும்
ஒரு கிராமத்தாரிடம்
வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு
தருமாறு அந்த கிராமத்தாரிடம்
கேட்டார்கள்; ஆனால்
அவ்விருவருக்கும் விருந்தளிக்க
அவர்கள் மறுத்து
விட்டார்கள்; அப்போது
அங்கே இடிந்து
அடியோடு விழும்
நிலையிலிருந்து
ஒரு சுவரை அவ்விருவரும்
கண்டனர்; ஆகவே, அவர்
(சரிசெய்து) நிமிர்த்து
வைத்தார். (இதைக்
கண்ட மூஸா) "நீங்கள்
நாடியிருந்தால்
இதற்கென ஒரு கூலியை
பெற்றிருக்கலாமே" என்று
(மூஸா) கூறினார்.
[18:78]
இது
தான் எனக்கும், உமக்குமிடையே
பிரிவு(க்குரிய
நேரம்) ஆகும்; எதைப்
பற்றி நீர் பொறுமையாக
இருக்க முடியவில்லையோ, அதன்
விளக்கத்தையும்
(இப்பொழுதே) உமக்குத்
திட்டமாக அறிவித்து விடுகிறேன்
என்று அவர் கூறினார்.
[18:79]
அம்மரக்கலம்
கடலில் வேலை செய்யும்
ஏழைகள் சிலருக்குச்
சொந்தமானது எனவே
நான் அதை (ஓட்டையிட்டு)ப்
பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்)
அவர்களுக்குப் பின்னால்
(கொடுங்கோலனான)
ஓர் அரசன் இருந்தான்; அவன்
(பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம்
பலவந்தமாக எடுத்துக்
கொள்கிறான்.
[18:80]
(அடுத்து)
அந்த சிறுவனுடைய
தாய், தந்தையர் இருவரும்
முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன்
(வாலிபனாகி) அவ்விருவரையும்
வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து
விடுவான் என்று
நாம் பயந்தோம்.
[18:81]
இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும்
(பெற்றோரிடம்)
அன்பு செலுத்துவதிலும்
சிறந்திருக்க
கூடிய (ஒரு மகனை)
அவ்விருவருடைய
இறைவன் (கொலையுண்டவனுக்குப்)
பதிலாக கொடுப்பதை
நாம் விரும்பினோம்.
[18:82]
இனி
(நான் நிமிர்த்து
வைத்த) அந்த சுவர்
அந்தப் பட்டினத்திலுள்ள
அநாதைச் சிறுவர்
இருவருக்குரியது
அதன் அடியில் அவ்விருவருக்கும்
சொந்தாமான புதையல் உள்ளது
அவ்விருவருடைய
தந்தை (ஸாலிஹான)
நல்ல மனிதராக இருந்தார்
எனவே, அவ்விருவரும்
தக்க பிராயமடைந்த
தம்மிருவரின்
புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்)
கொள்ள வேண்டும்
என உம்முடைய இறைவன்
நாடினான். (இவையெல்லாம்)
உம் இறைவனுடைய
ரஹ்மத்தில் நின்றும்
உள்ளவை என் விருப்பு, வெறுப்பின்படி
எந்தக் காரியத்தையும்
செய்யவில்லை எதைப்
பற்றி நீர் பொறுமையாக
இருக்க முடியவில்லையோ அதன்
விளக்கம் இது தான்" என்று
கூறினார்.
[18:83]
(நபியே!) அவர்கள்
துல்கர்னைனை பற்றி
உங்களிடம் வினவுகின்றனர்; "அவருடைய
வரலாற்றில் சிறிது
உங்களுக்கு நான் ஓதிக்
காண்பிக்கிறேன்" என்று
நீர் கூறுவீராக.