Maryam
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[19:1]
காஃப், ஹா, யா, ஐன், ஸாத்
[19:2]
(நபியே!
இது) உம்முடைய
இறைவன் தன் அடியாராகிய
ஜகரிய்யாவுக்கு
அருளிய ரஹ்மத்தைப்
பற்றியதாகும்.
[19:3]
அவர்
தம் இறைவனிடம்
தாழ்ந்த குரலில்
பிரார்த்தித்த
போது (இவ்வாறு
ரஹ்மத்தை அருளினான்).
[19:4]
(அவர்)
கூறினார்; "என் இறைவனே! நிச்சயமாக
என் எலும்புகள்
பலஹீனமடைந்து
விட்டன என் தலையும்
நரையால் (வெண்மையாய்)
இலங்குகிறது. என்
இறைவனே! (இதுவரையில்)
நான் உன்னிடம்
செய்த பிரார்த்தனையில்
பாக்கியம் இல்லாதவனாகப்
போய்விடவில்லை.
[19:5]
இன்னும், எனக்குப்
பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி
நிச்சயமாக நான் அஞ்சகிறேன்; மேலும், என் மனைவியோ
மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து
எனக்கு ஒரு வாரிசை
அளிப்பாயாக!
[19:6]
அவர்
எனக்கு வாரிசாகவும்
இருப்பார், யஃகூபுடைய
சந்ததியினருக்கு
வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே!
அவரை (உன்னால்)
பொருந்திக்கொள்ளப்
பட்டவராகவும்
நீ ஆக்கி வைப்பாயாக!"
[19:7]
ஜகரிய்யாவே!
யஹ்யா என்ற பெயர் கொண்ட
ஒரு புதல்வனை(த்
தருவது) பற்றி
நிச்சயமாக நாம்
உமக்கு நற்செய்தி கூறுகிறோம்.
இதற்கு முன்னர்
இப்பெயர் கொண்டவரை
நாம் ஆக்கவில்லை
(என்று இறைவன் கூறினான்).
[19:8]
(அதற்கு
அவர்) "என் இறைவனே! என் மனைவியோ
மலடாகவும், முதுமையின்
தள்ளாத பருவத்தை
நான் அடைந்தும் இருக்கும்
நிலையில் எனக்கு
எவ்வாறு ஒரு புதல்வன்
உண்டாகுவான்?" எனக் கூறினார்.
[19:9]
(அது) அவ்வாறே
(நடைபெரும்) என்று
கூறினான். இது எனக்கு
மிகவும் சுலபமானதே!
முன்னர் நீர் ஒரு
பொருளாகவும் இல்லாதிருந்த
காலத்து, நானே உம்மை
படைத்தேன் என்று
இறைவன் கூறினான்.
[19:10]
(அதற்கவர்) "என் இறைவனே! நீ எனக்கு
ஓர் அத்தாட்சியை
(இதற்காக) ஏற்படுத்துவாயாக!" என்று
வேண்டினார்; "நீர் சவுக்கியத்துடன்
இருக்கும் நிலையிலேயே
மூன்று இரவு(பகல்)கள்
நீர் மக்களுடன்
பேச முடியாமலிருப்பீர்; (அதுவே)
உமக்கு அத்தாட்சியாகும்" என்று கூறினான்.
[19:11]
ஆகவே
அவர் மிஹ்ராபை
(தொழும் இடம்)
விட்டு வெளியே
தம் சமூகத்தாரிடம்
வந்தார்; பின்னர்
அவர்களிடம் (பேச முடியாத
நிலையில் சயிக்கினையாக)
அவர், "காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத்
துதித்து) தஸ்பீஹீ
செய்யுங்கள்" என்று
உணர்த்தினார்.