[19:52]
இன்னும், நாம்
அவரை தூர் (ஸினாய்)
மலையின் வலப்புறத்திலிருந்து
கூப்பிட்டோம்; மேலும்
இரகசியத்தில்
பேச நாம்
அவரை நம்மிடம்
நெருங்கி வரச்
செய்தோம்.
[19:53]
மேலும், நம்முடைய
ரஹ்மத்தில் நின்றும்
அவருடைய சகோதரர்
ஹாரூனையும் நபியாக
அவருக்கு நன்கொடையளித்தோம்.
[19:54]
(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப்
பற்றியும் நினைவு
கூர்வீராக! நிச்சயமாக
அவர் வாக்குறுதியில் உண்மையாளராக
இருந்தார்; இன்னும்
அவர் தூதராகவும், நபியாகவும்
இருந்தார்.
[19:55]
அவர்
தம் குடும்பத்தினரைத் தொழுகையைக்
கடைப்பிடிக்கவும், ஜகாத்து
கொடுத்து வரும்படியும்
ஏவுபவராக இருந்தார் தம் இறைவனிடத்தில்
மிகவும் விரும்பப்பட்டவராகவும்
அவர் இருந்தார்.
[19:56]
(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப்
பற்றியும் நினைவு
கூர்வீராக! நிச்சயமாக
அவர் ஸித்தீக்காக
(மிக்க சத்தியவானாக)
நபியாக இருந்தார்.
[19:57]
மேலும், நாம்
அவரை ஓர் உயரிய இடத்தில்
உயர்த்தினோம்.
[19:58]
இவர்கள்
ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன்
(கப்பலில்) நாம்
ஏற்றிக் கொண்டவர்களி(ன்
சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல்
(யஃகூபின்) சந்ததியிலும், இன்னும்
நாம் தேர்ந்தெடுத்து
நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள
நபிமார்களாவார்கள்
- இவர்கள் மீது
அல்லாஹ் அருளைப்
பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய
வசனங்கள் அவர்களின்
மீது ஓதப்பட்டால், அவர்கள்
அழுதவர்களாகவும், ஸுஜூது
செய்தவர்களாகவும்
விழுவார்கள்.
[19:59]
ஆனால், இவர்களுக்குப்
பின் (வழி கெட்ட)
சந்ததியினர் இவர்களுடைய
இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள்
தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான
மன)இச்சைகளைப்
பின்பற்றினார்கள்; (மறுமையில்)
அவர்கள் (நரகத்தின்)
கேட்டைச் சந்திப்பார்கள்.
[19:60]
தவ்பா
செய்து, (பாவங்களிலிருந்து
விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான)
- நல்ல - செயல்களைச் செய்கிறார்களே
அவர்களைத் தவிர
அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்)
- சுவர்க்கத்தில்
பிரவேசிப்பார்கள்; (அவர்கள்
அடைய வேண்டிய நற்பயன்)
எதிலும் அவர்களுக்குக்
குறைவு செய்யப்பட
மாட்டாது.
[19:61]
அத்னு
என்னும் அந்தச் சுவனபதிகளை
அர்ரஹ்மான் தன்
நல்லடியார்களுக்கு
- அவற்றை அவர்கள்
காண முடியாத போதே - வாக்களித்தான்; நிச்சயமாக
அவனுடைய வாக்குறுதி
நிறைவேறும்.
[19:62]
ஸலாம்
(சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே)
தவிர அச்சுவனபதிகளில்
அவர்கள் வீணான
எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும்
அங்கே அவர்களுக்குக்
காலையிலும், மாலையிலும்
அவர்களுடைய உணவு
இருக்கிறது.
[19:63]
இத்தகைய
சுவர்க்கத்திற்கு
நம் அடியார்களில்
தக்வா - பயபக்தி
- உடையவர்களை நாம்
வாரிசாக்கிவிடுவோம்.
[19:64]
(மலக்குகள்
கூறுகிறார்கள்; நபியே!) "உமது இறைவனின்
கட்டளையில்லாமல்
நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு
பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில்
இருப்பது அவனுக்கே
(சொந்தமாக) இருக்கின்றன
உமது இறைவன் ஒரு
பொழுதும் மறப்பவனல்லன்."