[19:77]
நம்முடைய
வசனங்களை நிராகரித்துக்
கொண்டு, (மறுமையிலும்)
நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்
என்று கூறினானே
அவனை (நபியே!) நீர்
பார்த்தீரா?
[19:78]
(பின்னர்
நடக்கவிருக்கும்) மறைவான
விஷயத்தை அவன்
எட்டிப் பார்த்துத்
தெரிந்து கொண்டானா
அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து
உறுதிமொழி (ஏதேனும்)
பெற்றிருக்கிறானா?
[19:79]
அப்படியல்ல!
அவன் சொல்வதை நாம் எழுதி
வருவோம்; இன்னும்
நாம் அவனுடைய வேதனையை
மேலும் மேலும்
அதிகமாக்குவோம்.
[19:80]
இன்னும்
(தன் சொத்துக்கள் என்று
அவன் பெருமையடித்துப்)
பேசிக் கொண்டிருப்பவற்றையும்
நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம்
விட்டு) அவன் நம்மிடத்தில்
தன்னந்தனியாகவே
வருவான்.
[19:81]
(முஷ்ரிக்குகள்)
தங்களுக்காக (அல்லாஹ்விடம்
மன்றாடுவதற்கு)
வல்லமையுடையவையென்று
அல்லாஹ்வையன்றி
(வேறு) தெய்வங்களை
எடுத்துக் கொண்டுள்ளார்கள்!
[19:82]
அப்படியல்ல!
தங்களை இவர்கள் வணங்கியதையும்
நிராகரித்து இவர்களுக்கு
விரோதமாக மாறிவிடுவீர்.
[19:83]
காஃபிர்களை
(வழி கேட்டில் செல்லும்படித்)
தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே
நிச்சயமாக ஷைத்தான்களை
நாம் அனுப்பியிருக்கிறோம்
என்பதை நீர் பார்க்க
வில்லையா?
[19:84]
எனவே
அவர்களுக்காக
நீர் அவசரப்படாதீர்!
அவர்களுக்கு (வேதனைக்குரிய
தவணையின்) கணக்கை
நாம் கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்.
[19:85]
அர்ரஹ்மானாகிய
நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை
நாம் கூட்டமாக
ஒன்று சேர்க்கும்
நாளில்;
[19:86]
குற்றவாளிகளை
(அவர்கள்) தாகம் தீர்த்துக்
கொள்வதற்காக நரகை
நோக்கி நாம் விரட்டுவோம்.
[19:87]
அர்ரஹ்மானிடம்
உடன்படிக்கை செய்து
கொண்டோரைத் தவிர, எவரும்
ஷஃபாஅத்திற்கு
- மன்றாட்டத்திற்கு
- அதிகாரம் பெற மாட்டார்கள்.
[19:88]
இன்னும், "அர்ரஹ்மான் (தனக்கென)
ஒரு குமாரனை எடுத்துக்
கொண்டுள்ளான்" என்று
அவர்கள் கூறுகிறார்கள்.
[19:89]
நிச்சயமாக
நீங்கள் அபாண்டமான
(ஒரு கூற்றைக்)
கொண்டு வந்திருக்கிறீர்கள்.
[19:90]
இவர்களின்
இந்தக் கூற்றினால்
வானங்கள் வெடித்து
பூமி பிளந்து மலைகள்
சிதறுண்டு விடும்
போதிலும்.
[19:91]
அவர்கள்
அர்ரஹ்மானுக்கு
ஒரு குமாரன் உண்டென்று
தாவாச்செய்வதினால்-
[19:92]
ஒரு
குமாரனை எடுத்துக்
கொள்வது அல்லாஹ்வுக்குத்
தேவையில்லாதது.
[19:93]
ஏனென்றால்
வானங்களிலும், பூமியிலும்
உள்ள ஒவ்வொருவரும்
அர்ரஹ்மானிடம் அடிமையாய்
வருபவரேயன்றி
வேறில்லை.
[19:94]
நிச்சயமாக
அவற்றையெல்லாம்
அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும்
அவற்றைத் துல்லியமாகக்
கணக்கிட்டு வைத்திருக்கிறான்.
[19:95]
கியாம
நாளில் அவர்களில்
ஒவ்வொருவரும்
தனித்தனியாக அவனிடம்
வருவர்.