[19:96]
நிச்சயமாக
எவர்கள் ஈமான்
கொண்டு (ஸாலிஹான-)
நல்ல செயல்களைச்
செய்கின்றார்களோ அவர்களுக்கு
அர்ரஹ்மான் (யாவரின்)
நேசத்தை ஏற்படுத்துவான்.
[19:97]
அவர்களுக்கு
முன்னர், எத்தனையோ
தலைமுறையினரை
நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில்
ஒருவரையேனும்
நீர் பார்க்கிறீரா? அல்லது
அவர்களுடைய இலேசான
சப்தத்தை நீர்
கேட்கிறீரா?
[19:98]
Not
Available
Tâ-Hâ
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[20:1]
தாஹா.
[20:2]
(நபியே!) நீர்
துன்பப்படுவதற்காக
நாம் இந்த குர்ஆனை
உம்மீது இறக்கவில்லை.
[20:3]
(அல்லாஹ்வுக்கு)
அஞ்சுவோருக்கு
நல்லுபதேசமே அன்றி
(வேறில்லை).
[20:4]
பூமியையும், உயர்வான
வானங்களையும்
படைத்தவனிடமிருந்து
அது இறக்கி அருளப் பெற்றது.
[20:5]
அர்ரஹ்மான்
அர்ஷின் மீது அமைந்தான்.
[20:6]
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும்
இடையே உள்ளவையும், மண்ணுக்கு
அடியில் உள்ளவையும்
அவனுக்கே உரியன.
[20:7]
(நபியே!) நீர்
உரக்கச் சொன்னாலும்
நிச்சயமாக அவன்
இரகசியத்தையும்
(அதை விட) மறைவானதையும்
அறிகிறான்.
[20:8]
அல்லாஹ்
- அவனைத் தவிர வணக்கத்திற்குரிய
நாயன் வேறில்லை, அவனுக்கு
அழகிய திரு நாமங்கள்
இருக்கின்றன.
[20:9]
இன்னும்
(நபியே!) மூஸாவின்
வரலாறு உம்மிடம்
வந்ததா?
[20:10]
அவர்
நெருப்பைக் கண்டு
தம் குடும்பத்தாரிடம்
நீங்கள் (இங்கு
சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக
நான் நெருப்பைக்
கண்டேன்; ஒரு வேளை
அதிலிருந்து உங்களுக்கு
ஓர் எரி கொள்ளியைக்
கொண்டு வரவோ, அல்லது
நாம் செல்ல வேண்டிய
பாதையை அந் நெருப்பி(ன்
உதவியி)னால் கண்டு
பிடிக்கவோ செய்யலாம்" என்று
(கூறினார்).
[20:11]
அவர்
(நெருப்பின்) அருகே
வந்த போது "மூஸாவே!" என்று
அழைக்கப் பட்டார்.
[20:12]
நிச்சயமாக
நாம் தான் உம்முடைய
இறைவன், நீர் உம் காலணிகள்
இரண்டையும் கழற்றிவிடும்!
நிச்சயமாக நீர்
'துவா' என்னும்
புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.