[20:13]
இன்னும்
நாம் உம்மை (என்
தூதராக)த் தேர்ந்தெடுத்தேன், ஆதலால்
வஹீயின் வாயிலாக (உமக்கு)
அறிவிக்கப் படுவதற்கு
நீர் செவியேற்பீராக.
[20:14]
நிச்சயமாக
நாம் தான் அல்லாஹ்!
என்னைத் தவிர வேறு
நாயன் இல்லை, ஆகவே, என்னையே
நீர் வணங்கும், என்னை
தியானிக்கும்
பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.
[20:15]
ஒவ்வோர்
ஆத்மாவும் தான்
செய்ததற்குத்
தக்கபடி பிரதிபலன்கள்
அளிக்கப்படும் பொருட்டு
(நியாயத் தீர்ப்புக்குரிய)
வேளை நிச்சயமாக
வரவிருக்கிறது, ஆயினும்
அதை மறைத்து
வைக்க நாடுகிறேன்.
[20:16]
ஆகவே, அதனை
நம்பாது, தன் (மன)
இச்சையைப் பின்பற்றுபவன்
திடனாக அதைவிட்டும்
உம்மைத் திருப்பிவிட
வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.
[20:17]
மூஸாவே!
உம்முடைய வலது
கையில் இருப்பது
என்ன?" (என்றும் அல்லாஹ் கேட்டான்.)
[20:18]
(அதற்கவர்) "இது என்னுடைய கைத்தடி, இதன் மீது
நான் சாய்ந்து
கொள்வேன், இதைக்
கொண்டு என் ஆடுகளுக்கு
இலைகள் பறிப்பேன், இன்னும்
இதில் எனக்கு வேறு
தேவைகளும் நிறைவேறுகின்றன" என்று கூறினார்.
[20:19]
அதற்கு
(இறைவன்) "மூஸாவே! அதை நீர்
கீழே எறியும்" என்றான்.
[20:20]
அவ்வாறே
அவர் அதனைக் கீழே எறிந்தார், அப்போது
அது ஊர்ந்து செல்லும்
ஒரு பாம்பாயிற்று.
[20:21]
(இறைவன்)
கூறினான்: "அதைப்
பிடியும், பயப்படாதீர்; உடனே நாம்
அதை அதன் பழைய
நிலைக்கே மீட்டுவோம்."
[20:22]
இன்னும், உம் கையை
உம் விலாப்புறமாக
புகுத்தி (வெளியில்)
எடும், அது ஒளி மிக்கதாய்
மாசற்ற வெண்மையாக
வெளிவரும், இது மற்றோர்
அத்தாட்சியாகும்.
[20:23]
(இவ்வாறு)
நம்முடைய பெரிய
அத்தாட்சிகளிலிருந்து
(சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.
[20:24]
ஃபிர்அவ்னிடம்
நீர் செல்வீராக! நிச்சயமாக
அவன் (வரம்பு) மீறி
விட்டான் (என்றும்
அல்லாஹ் கூறினான்).
[20:25]
(அதற்கு
மூஸா) கூறினார்: "இறைவனே!
எனக்காக என் நெஞ்சத்தை
நீ (உறுதிப்படுத்தி)
விரிவாக்கி தருவாயாக!
[20:26]
என்
காரியத்தை எனக்கு
நீ எளிதாக்கியும்
வைப்பாயாக!
[20:27]
என்
நாவிலுள்ள (திக்குவாய்)
முடிச்சையும்
அவிழ்ப்பாயாக!
[20:28]
என்
சொல்லை அவர்கள்
விளங்கிக் கொள்வதற்காக!
[20:29]
என்
குடும்பத்திலிருந்து
எனக்கு (உதவி செய்ய)
ஓர் உதவியாளரையும்
ஏற்படுத்தித் தருவாயாக!
[20:30]
என்
சகோதரர் ஹாரூனை
(அவ்வாறு ஏற்படுத்தித்
தருவாயாக)!
[20:31]
அவரைக்
கொண்டு என் முதுகை
வலுப்படுத்துவாயாக!
[20:32]
என்
காரியத்தில் அவரைக்
கூட்டாக்கி வைப்பாயாக!
[20:33]
நாங்கள்
உன்னை அதிகமதிகம்
(தஸ்பீஹு செய்து)
துதிப்பதற்காகவும்,
[20:34]
உன்னை
அதிகமதிகம் நினைவு
கூர்வதற்காகவும்
(இவற்றையெல்லாம் அருள்வாயாக!)
[20:35]
நிச்சயமாக, நீ எங்களை
நோக்கியவனாகவே
இருக்கிறாய்" (என்றார்)
[20:36]
மூஸாவே!
நீர் கேட்டவை, நிச்சயமாக
உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன
என்று (அல்லாஹ்)
கூறினான்.
[20:37]
மேலும், முன்னர்
மற்றொரு முறையும்
நிச்சயமாக நாம்
உம்மீது பேரருள்
புரிந்துள்ளோம்.