[20:65]
மூஸாவே!
நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில்
நாங்கள் முதலாவதாக
இருக்கட்டுமா? என்று
(சூனியக்காரர்)
கேட்டனர்.
[20:66]
அதற்கவர்; "அவ்வாறன்று! நீங்களே
(முதலில்) எறியுங்கள்" என்று
(மூஸா) கூறினார்.
(அவர்கள் எறியவே) அவர்களுடைய
கயிறுகளும் அவர்களுடைய
தடிகளும் அவர்கள்
சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக
நெளிந்தோடுவது
போல் அவருக்குத்
தோன்றியது.
[20:67]
அப்போது, மூஸா
தம் மனதில் அச்சம்
கொண்டார்.
[20:68]
(மூஸாவே!) நீர்
பயப்படாதீர்! நிச்சயமாக
நீர் தாம் மேலோங்கி
நிற்பீர்! என்று
நாம் சொன்னோம்.
[20:69]
இன்னும், உம் வலது
கையில் இருப்பதை
நீர் கீழே எறியும்; அவர்கள்
செய்த (சூனியங்கள்
யா)வற்றையும் அது விழுங்கி
விடும்; அவர்கள் செய்தது
சூனியக்காரனின்
சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன்
எங்கு சென்றாலும்
வெற்றி பெற மாட்டான்
(என்றும் கூறினோம்).
[20:70]
(மூஸா வெற்றி
பெற்றதும்) சூனியக்காரர்கள்
ஸுஜூது செய்தவர்களாக
வீழ்த்தப்பட்டு
- "ஹாரூனுடைய மூஸாவுடைய
இறைவன் மீதே நாங்கள்
ஈமான் கொள்கிறோம்" என்று
கூறினார்கள்.
[20:71]
நான்
உங்களை அனுமதிக்கும் முன்னரே
நீங்கள் அவர் மேல்
ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக
அவர் உங்களுக்குச்
சூனியத்தைக் கற்றுக்
கொடுத்த தலைவர்
(போல் தோன்றுகிறது); எனவே, நான்
உங்களை மாறு கை, மாறு
கால் வாங்கி, பேரீத்த
மரக்கட்டைகளில்
உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும்
வேதனை கொடுப்பதில்
நம்மில் கடுமையானவர்
யார், அதில் நிலையாக
இருப்பவரும் யார்
என்பதை நிச்சயமாக
நீங்கள் அறிந்து
கொள்வீர்கள் என்று (ஃபிர்அவ்ன்)
கூறினான்.
[20:72]
(மனந்திருந்திய
அவர்கள் ஃபிர்அவ்னிடம்) "எங்களுக்கு
வந்துள்ள தெளிவான
அத்தாட்சிகளை
விடவும், எங்களைப்
படைத்தவனை விடவும்
உன்னை (மேலானவனாக)
நாங்கள் எடுத்துக்
கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன
தீர்ப்புச் செய்ய
நீ இருக்கிறாயோ
அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச்
செய்வதெல்லாம்
இவ்வுலக வாழ்க்கையில்
தான்" என்று கூறினார்.
[20:73]
எங்களின்
தவறுகளையும், எங்களை நீ கட்டாயப்
படுத்தினால் (நாங்கள்
செய்ய நேர்ந்த)
சூனியத்தையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக
எங்கள் இறைவன்
மீது நிச்சயமாக
நாங்கள் ஈமான்
கொண்டோம்; மேலும், அல்லாஹ்
தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்)
நிலைத்திருப்பவனாகவும்
இருக்கின்றான் (என்று
கூறினார்கள்).
[20:74]
நிச்சயமாக
எவன் தன் இறைவனிடத்தில்
குற்றவாளியாக
வருகிறானோ, அவனுக்கு
நரகம் நிச்சயமாக
இருக்கிறது. அதில்
அவன் மரிக்கவும்
மாட்டான். வாழவும்
மாட்டான்.
[20:75]
ஆனால், எவர்கள்
முஃமினாக, ஸாலிஹான
(நல்ல) செயல்களைச்
செய்தவர்களாக
அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான
பதவிகள் உண்டு.
[20:76]
(அத்தகையவர்க்கு)
என்றென்றும் நிலைத்திருக்கும்
சுவனபதிகள் உண்டு
அவற்றின் கீழே
ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில்
அவர் என்றென்றும்
வசிப்பர் இதுவே
(பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின்
(நற்) கூலியாகும்.