[20:88]
பின்னர்
அவன் அவர்களுக்காக
ஒரு காளைக்கன்றை
(உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு
மாட்டின் சப்தமும்
இருந்தது. (இதைக் கண்ட)
சிலர் "இது தான்
உங்களுடைய நாயன்;
இன்னும்
(இதுவே) மூஸாவின் நாயனுமாகும்;
ஆனால்
அவர் இதை மறந்து
விட்டார்" என்று சொன்னார்கள்.
[20:89]
அவர்களுக்கு
அது மறுபடி எதுவும்
சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக
நன்மையையோ, தீமையையோ
செய்யச் சக்தியற்றது
என்பதையும் அவர்கள்
பார்க்க வில்லையா?
[20:90]
இதற்கு
முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, "என் சமூகத்தாரே!
நிச்சயமாக இதைக்
கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக
உங்களுடைய இறைவன்
'அர்ரஹ்மானே' ஆவான்; எனவே, என்னைப்
பின்பற்றுங்கள்.
இன்னும் என் கட்டளைக்குக்
கீழ்ப்படியுங்கள்" என்று
கூறினார்.
[20:91]
மூஸா
எங்களிடம் திரும்பி
வரும் வரையில், நாங்கள்
இதன் ஆராதனையை
நிறுத்த மாட்டோம்
என்று அவர்கள்
கூறினர்.
[20:92]
(மூஸா திரும்பியதும்
தம் சகோதரரிடம்) "ஹாரூனே! இவர்கள்
வழி கெடுகிறார்கள்
என்று நீங்கள்
கண்ட போது (அவர்களுக்கு
போதனை செய்து திருத்துவதில்
நின்றும்) உங்களைத்
தடை செய்தது யாது? என்று
கேட்டார்.
[20:93]
நீங்கள்
என்னைப் பின்பற்றியிருக்க
வேண்டாமா? (அவ்வாறு
செய்வதை என்ன தடுத்தது?)
நீங்கள் என் கட்டளையை
மீறினீர்களா?
[20:94]
(இதற்கு
ஹாரூன்;) "என் தாயின் மகனே! என் தாடியையோ
என் தலை (முடி)யையோ
பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே
நீங்கள் பிரிவினையை
உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள்
காத்திருக்கவில்லை!' என்று
நீர் கூறுவீரோ
என நிச்சயமாக நான்
அஞ்சினேன்" என்று
கூறினார்.
[20:95]
ஸாமிரிய்யே!
உன் விஷயமென்ன? என்று
மூஸா அவனிடம் கேட்டார்.
[20:96]
அவர்கள்
காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான்
அந்த தூதர் காலடியிலிருந்து
ஒரு பிடி (மண்ணாகப்)
பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம்
(செய்வதை) என் மனம்
எனக்கு அழகா(ன
செயலா)க ஆக்கிற்று
என (ஸாமிரீ
பதில்) சொன்னான்.
[20:97]
நீ இங்கிருந்து
போய் விடு நிச்சயமாக
இந்த வாழ்க்கையில்
(எவரைக் கண்டாலும், என்னைத்)
தீண்டாதீர்கள்" என்று
சொல்(லித் திரி)வது
தான் உனக்குள்ளது, (மறுமையில்)
நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட
வேதனையும் உண்டு
அதை விட்டும் நீ
தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு
ஆராதனை செய்து
கொண்டிருந்தாயே
அந்த "நாயனைப்" பார்; நிச்சயமாக
அதனைச் சுட்டெரித்துப்
பின்னர் (சாம்பலாக்கி)
அதைக் கடலில் பரத்திவிடுவோம்" என்றார்.
[20:98]
உங்களுடைய
நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத்
தவிர (வணக்கத்திற்குரிய)
நாயன் வேறில்லை
எல்லாப் பொருட்களிலும்
ஞானத்தால் விசாலமானவன்
என்றும் கூறினார்.