[20:114]
ஆகவே, உண்மை
அரசனாகிய அல்லாஹ்வே
மிக உயர்ந்தவன்; இன்னும்
(நபியே!) உமக்கு
(குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு
அது முடிவதற்கு
முன்னதாகவே குர்ஆனை
ஓத நீர் அவசரப்படாதீர்; "இறைவா!
கல்வி ஞானத்தை
எனக்கு அதிகப்படுத்துவாயாக!" என்றும்
நீர் பிரார்த்தனை
செய்வீராக!
[20:115]
முன்னர், நாம்
ஆதமுக்கு நிச்சயமாக
கட்டளையிட்டிருந்தோம்; ஆனால்
(அதனை) அவர் மறந்து
விட்டார் (அக்கட்டளைபடி
நடக்கும்) உறுதிப்பாட்டை
நாம் அவரிடம் காணவில்லை.
[20:116]
நீங்கள்
ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்
என்று நாம் வானவர்களிடம்
கூறிய போது, இப்லீஸை
தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்.
அவன் (அவ்வாறு
செய்யாது) விலகிக்
கொண்டான்.
[20:117]
அப்பொழுது "ஆதமே! நிச்சயமாக
இவன் உமக்கும், உம்முடைய
மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால், உங்களிருவரையும்
இச்சுவனபதியிலிருந்து
திட்டமாக வெளியேற்ற
(இடந்) தரவேண்டாம்; இன்றேல்
நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
[20:118]
நிச்சயமாக
நீர் இ(ச் சுவர்க்கத்)தில்
பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.
[20:119]
இன்னும்
இதில் நீர் தாகிக்கவும், வெயிளில்
(கஷ்டப்)படவும்
மாட்டீர் (என்று கூறினோம்).
[20:120]
ஆனால், ஷைத்தான்
அவருக்கு (ஊசலாட்டத்தையும்)
குழப்பத்தையும்
உண்டாக்கி "ஆதமே!
நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத
அரசாங்கத்தையும்
உமக்கு நான் அறிவித்துத்
தரவா?" என்று கேட்டான்.
[20:121]
பின்னர்
(இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி)
அவ்விருவரும்
அ(ம் மரத்)தினின்று
புசித்தனர் உடனே
அவ்விருவரின் வெட்கத்
தலங்களும் வெளியாயின
ஆகவே அவ்விருவரும்
சுவர்க்கத்துச்
சோலையின் இலையைக் கொண்டு
அவற்றை மறைத்துக்
கொள்ளலானார்கள்; இவ்வாறு
ஆதம் தம்முடைய
இறைவனுக்கு மாறு செய்து, அதனால்
வழி பிசகி விட்டார்.
[20:122]
பின்னர்
அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து
அவரை மன்னித்து
நேர்வழியும் காட்டினான்.
[20:123]
இதிலிருந்து
நீங்கள் இருவரும்
சேகரமாக இங்கிருந்து
வெளியேறி விடுங்கள்.
உங்க(ள் சந்ததிக)ளில்
சிலருக்குச் சிலர்
பகைவர்களாகவேயிருப்பார்கள்; அப்பொழுது
நிச்சயமாக என்னிடமிருந்து
உங்களுக்கு நேர்வழி
வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப்
பின் பற்றி நடக்கிறாரோ
அவர் வழி தவறவும்
மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.
[20:124]
எவன்
என்னுடைய உபதேசத்தைப்
புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக
அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே
இருக்கும்; மேலும், நாம்
அவனை கியாம நாளில்
குருடனாவே எழுப்புவோம்" என்று
கூறினான்.
[20:125]
(அப்போது
அவன்) "என் இறைவனே! நான்
பார்வையுடையவனாக
இருந்தேனே! என்னை
ஏன் குருடனாக எழுப்பினாய்?" என்று
கூறுவான்.