[21:25]
(நபியே!) உமக்கு
முன்னர் நாம் அனுப்பிய
ஒவ்வொரு தூதரிடமும்; "நிச்சயமாக
(வணக்கத்திற்குரிய)
நாயன் என்னைத் தவிர வேறு
எவருமில்லை எனவே, என்னையே
நீங்கள் வணங்குங்கள்" என்று
நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
[21:26]
அவர்கள்; "அர்ரஹ்மான்
ஒரு குமாரனைத்
தனக்கென எடுத்துக்
கொண்டிருக்கின்றான்" என்று
கூறுகிறார்கள்; (ஆனால்)
அவனோ மிகவும் தூயவன்!
அப்படியல்ல (அல்லாஹ்வின்
குமாரர்கள் என்று
இவர்கள் கூறுவோரெல்லோரும்
அல்லாஹ்வின்) கண்ணியமிக்க
அடியார்களே ஆவார்கள்.
[21:27]
அவர்கள்
(எந்க ஒரு பேச்சையும்) அவனை
முந்திப் பேச மாட்டார்கள்; அவர்கள்
அவன் கட்டளைப்
படியே (எதையும்) செய்கிறார்கள்.
[21:28]
அவர்களுக்கு
முன்னால் இருப்பவற்றையும், அவர்களுக்குப்
பின்னால் இருப்பவற்றையும்
அவன் நன்கறிவான்; இன்னும்
எவரை அவன் பொருந்தி
ஏற்றுக் கொள்கிறானோ
அ(த் தகைய)வருக்கன்றி
- அவர்கள் பரிந்து
பேச மாட்டார்கள்.
இன்னும் அவர்கள்
அவன் பால் உள்ள
அச்சத்தால் நடுங்குபவர்களாகவும்
இருக்கின்றார்கள்.
[21:29]
இன்னும், அவர்களில்
எவரேனும் "அவனன்றி
நிச்சயமாக நானும்
நாயன்தான்" என்று
கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு
- நாம் நரகத்தையே
கூலியாகக் கொடுப்போம்
- இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக்
கூலி கொடுப்போம்.
[21:30]
நிச்சயமாக
வானங்களும், பூமியும்
(முதலில்) இணைந்திருந்தன
என்பதையும், இவற்றை
நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள
ஒவ்வொன்றையும்
நாம் தண்ணீரிலிருந்து
படைத்தோம் என்பதையும் காஃபிர்கள்
பார்க்கவில்லையா? (இவற்றைப்
பார்த்தும்) அவர்கள்
நம்பிக்கை கொள்ள வில்லையா?
[21:31]
இன்னும்; இப்பூமி (மனிதர்களுடன்)
ஆடி சாயாமலிருக்கும்
பொருட்டு, நாம்
அதில் நிலையான
மலைகளை அமைத்தோம்; அவர்கள்
நேரான வழியில்
செல்லும் பொருட்டு, நாம்
விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
[21:32]
இன்னும்
வானத்தை நாம் பாதுகாப்பான
விதானமாக அமைத்தோம்
-எனினும் அவர்கள்
அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து
விடுகிறார்கள்.
[21:33]
இன்னும்
அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும்
படைத்தான்; (வானில்
தத்தமக்குரிய) வட்டவரைக்குள்
ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
[21:34]
(நபியே!) உமக்கு
முன்னர் எந்த மனிதனுக்கும்
(அவன்) என்றென்னும்
இருக்கக்கூடிய
நித்திய வாழ்வை
நாம் (இங்கு) கொடுக்கவில்லை
ஆகவே நீர் மரித்தால்
அவர்கள் மட்டும்
எனறென்றும் வாழப் போகிறார்களா?
[21:35]
ஒவ்வோர்
ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே
இருக்கிறது பரீட்சைக்காக
கெடுதியையும், நன்மையையும்
கொண்டு நாம் உங்களைச்
சோதிக்கிறோம்.
பின்னர், நம்மிடமே
நீங்கள் மீட்கப்படுவீர்கள்.