[21:45]
நிச்சயமாக
நான் உங்களுக்கு எச்சரிக்கை
செய்வதெல்லாம்
வஹீ மூலம் எனக்கு
அறிவிக்கப்பட்டதைக்
கொண்டேதான் என்று (நபியே!)
நீர் கூறும்; எனினும், செவிடர்கள்
அச்சமூட்டி எச்சரிக்கப்படும்
போது, (அவர்கள் நேர்வழி
பெறும்) அந்த அழைப்பைச்
செவிமடுக்க மாட்டார்கள்.
[21:46]
உம்முடைய
இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து
ஒரு மூச்சு அவர்களைத்
தீண்டுமானாலும், "எங்களுக்குக்
கேடு தான்!
திட்டமாக நாங்கள்
அநியாயக்காரர்களாகவே
இருந்தோம்" என்று
அவர்கள் நிச்சயமாக
கூ(றிக் கத)றுவார்கள்.
[21:47]
எனவே
எந்த ஓர் ஆத்மாவும்
ஒரு சிறிதும்
அநியாயம் செய்யப்படமாட்டாது
மேலும் (நன்மை, தீமையில்)
ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும்
நாம் (கணக்கில்)
கொண்டு வருவோம்.
அவ்வாறே கணக்கெடுக்க நாமே
போதும்.
[21:48]
இன்னும், நாம்
மூஸாவுக்கும் ஹாரூனுக்கும்
(நன்மை தீமைகளைப்)
பிரித்தறிவிக்கும்
வேதத்தை நிச்சயமாக
நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு
ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும்
இருந்தது.
[21:49]
அவர்கள்
தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும்
அஞ்சுவார்கள்; இன்னும்
அந்த (இறுதி) வேளையைக்
குறித்துப் பயந்து
கொண்டும் இருப்பார்கள்.
[21:50]
இன்னும்
இது (குர்ஆன்) நாம் அருள்
செய்த பாக்கியம்
மிக்க புனிதமான
உபதேசமாகும். இதனையா
நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?
[21:51]
இன்னும், நாம்
முன்னரே இப்ராஹீமுக்கு
அவருக்குத் தகுந்த
நேர்மையான வழியைத்
திடனாக கொடுத்தோம்
- அவரைப் பற்றி
நாம் அறிந்திருந்தோம்.
[21:52]
அவர்
தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் "நீங்கள்
வழிபடும் இந்த
உருவங்கள் என்ன?" என்று
கேட்ட போது
[21:53]
அவர்கள், "எங்கள் மூதாதையவர்கள்
இவற்றை வணங்கிக்
கொண்டிருந்ததை
நாங்கள் கண்டோம்
என்று கூறினார்கள்.
[21:54]
(அதற்கு)
அவர், "நிச்சயமாக
நீங்களும், உங்களுடைய
மூதாதையவரும்
- பகிரங்கமான வழி
கேட்டில் தான் இருந்து
வருகிறீர்கள்
என்று கூறினர்.
[21:55]
(அதற்கு)
அவர்கள் "நீர் எங்களிடம்
உண்மையைக் கொண்டு
வந்திருக்கிறீரா? அல்லது
விளையாடுபவர்களில்
ஒருவராக இருக்கின்றீரா?" என்று
கேட்டார்கள்.
[21:56]
அப்படியல்ல.
உங்களுடைய இறைவன் வானங்களுக்கும்
பூமிக்கும் இறைவனாவான்.
அவனே அவற்றைப்
படைத்தவன்; இதற்குச் சாட்சியம்
கூறுபவர்களில்
நானும் ஒருவனாக
இருக்கின்றேன்
என்று (இப்ராஹீம்) கூறினார்.
[21:57]
இன்னும்; நீங்கள்
திரும்பிச் சென்ற
பின்னர், அல்லாஹ்வின்
மீது சத்தியமாக
உங்கள் சிலைகளுக்கு
ஒரு சதி செய்வேன்!
(என்றும் கூறினார்.)