[21:102]
(இத்தகைய
சுவர்க்கவாசிகள் நரகின்)
கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும்
இன்பத்திலேயே
அவர்கள் என்றென்றும்
நிலைத்திருப்பார்கள்.
[21:103]
(அந்நாளில்
ஏற்படும்) பெரும் திகில்
அவர்களை வருத்தாது, மலக்குகள்
அவர்களைச் சந்தித்து "உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட
நாள் இதுதான்" (என்று
கூறுவார்கள்).
[21:104]
எழுதப்பட்ட
ஏடுகளைச் சருட்டுவதைப்
போல் வானத்தை நாம்
சுருட்டிவிடும்
அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில்
படைப்புகளைப்
படைத்தது போன்றே, (அந்நாளில்)
அதனை மீட்டுவோம்; இது நம்
மீது வாக்குறுதியாகும்; நிச்சயமாக
நாம் இதனை செய்வோம்.
[21:105]
நிச்சயமாக
நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய
வேதத்தைப் பற்றி)
நினைவூட்டிய பின்; "நிச்சயமாக
பூமியை (ஸாலிஹான) என்னுடைய
நல்லடியார்கள்
வாரிசாக அடைவார்கள்
என்று எழுதியிருக்கிறோம்.
[21:106]
வணங்கும்
மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்)
நிச்சயமாகப் போதுமான
(வழிகாட்டுதல்)
இருக்கிறது.
[21:107]
(நபியே!) நாம்
உம்மை அகிலத்தாருக்கு
எல்லாம் ரஹ்மத்தாக
- ஓர் அருட் கொடையாகவேயன்றி
அனுப்பவில்லை.
[21:108]
எனக்கு
வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்; 'உங்கள்
நாயன் ஒரே நாயன்
தான்' என்பதுதான்; ஆகவே நீங்கள்
அவனுக்கு வழிப்பட்டு
நடப்பீர்களா? (என்று நபியே!) நீர்
கேட்பீராக!
[21:109]
ஆனால், அவர்கள்
புறக்கணித்து விடுவார்களாயின் "நான்
உங்கள் (எல்லோருக்கும்)
சமமாக அறிவித்துவிட்டேன்; இன்னும், உங்களுக்கு
வாக்களிக்கப்
பட்ட (வேதனையான)து
சமீபத்திலிருக்கிறதா
அல்லது தூரத்தில்
இருக்கிறதா என்பதை
நான் அறியமாட்டேன்" என்று
(நபியே!) நீர் சொல்லிவிடுவீராக.
[21:110]
வெளிப்படையாக
(நீங்கள் பேசும்) பேச்சையும்
அவன் நிச்சயமாக
அறிகிறான்; நீங்கள்
(இருதயத்தில்)
மறைத்து வைப்பதையும்
அவன் (நிச்சயமாக)
அறிகிறான் (என்றும்)
[21:111]
இந்த
தாமதம் உங்களுக்கு சோதனையாகவும்
குறிப்பட்ட காலம்
வரை சுகம் அனுபவிப்பதற்காகவும்
இருக்குமா என்பதை நான்
அறியமாட்டேன்.
[21:112]
என்
இறைவா! சத்தியத்
தீர்ப்பு வழங்குவாயாக!
என்று கூறினார்.
எங்கள் இறைவனோ
அளவற்ற அருளாளன்.
நீங்கள் வர்ணிப்பதற்கு
எதிராக உதவி தேடப்படுபவன்.