[22:6]
இது
ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்
அவனே உண்மையானவன்
- (நிலையானவன்) நிச்சயமாக
அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான்
- இன்னும், நிச்சயமாக
அவன்தான் எல்லாப்
பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன்
என்பதனால்.
[22:7]
(கியாம
நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக
வரும்; இதில் சந்தேகமே
இல்லை கப்ருகளில்
இருப்போரை, நிச்சயமாக
அல்லாஹ் (உயிர்
கொடுத்து) எழுப்புவான்.
[22:8]
இன்னும்; கல்வி
ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான
வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக்
குறித்துத் தர்க்கம்
செய்பவனும் மனிதர்களில்
இருக்கின்றான்.
[22:9]
(அவன்)
அல்லாஹ்வின் பாதையை விட்டும்
மனிதர்களை வழி
கெடுப்பதற்காக
ஆணவத்தோடு (இவ்வாறு
தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு
இவ்வுலகிலும்
இழிவு இருக்கிறது
கியாம நாளில் நாம்
அவனை எரிநரகின் வேதனையையும்
சுவைக்க செய்வோம்.
[22:10]
உன்னுடைய
இரு கரங்களும் முன்னரே
அனுப்பியுள்ளதற்காக
இரு (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக
அல்லாஹ் அடியார்களுக்கு
ஒரு சிறிதும் அநியாயம்
செய்பவனல்லன்
(என்று அந்நாளில்
அவர்களிடம் கூறப்படும்)
[22:11]
இன்னும்; மனிதர்களில்
(ஓர் உறுதியும்
இல்லாமல்) ஓரத்தில்
நின்று கொண்டு
அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான்
- அவனுக்கு ஒரு
நன்மை ஏற்படுமாயின்
அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து
கொள்கிறான்; ஆனால்
அவனுக்கு ஒரு சோதனை
ஏற்படுமாயின், அவன்
(தன் முகத்தை)
அல்லாஹ்வை விட்டும்
திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன்
இம்மையிலும் மறுமையிலும்
நஷ்டமடைகிறான்
-இதுதான் தெளிவான
நஷ்டமாகும்.
[22:12]
அவன், அல்லாஹ்வையன்றி, தனக்குத்
தீங்கிழைக்க முடியாததையும், இன்னும்
தனக்கு நன்மையும்
செய்யாததையுமே பிரார்த்திக்கிறான்
- இதுதான் நெடிய
வழிகேடாகும்.
[22:13]
எவனது
தீமை, அவனது நன்மையை
விட மிக நெருங்கியிருக்கிறதோ
அவனையே அவன் பிரார்த்திக்கிறான்
- திடமாக (அவன்
தேடும்) பாதுகாவலனும்
கெட்டவன்; (அப்பாதுகாவலனை
அண்டி நிற்பவனும்)
கெட்ட தோழனே.
[22:14]
நிச்சயமாக, அல்லாஹ்
ஈமான் கொண்டு
(ஸாலிஹான) - நற்செயல்
செய்பவர்களை சவனபதிகளில்
பிரவேசிக்கச்
செய்கிறான்; அவற்றின்
கீழே ஆறகள் ஓடிக்
கொண்டிருக்கும்
- நிச்சயமாக அல்லாஹ், தான்
நாடுவதைச் செய்கிறான்.
[22:15]
எவன்
(நம் தூதர் மேல்
பொறாமை கொண்டு)
அல்லாஹ் அவருக்கு
இவ்வுலகிலும்
மறுமையிலுமு; உதவி
செய்யமாட்டான்
என்று எண்ணுகிறானோ, அவன்
ஒரு கயிற்றை வானத்தின்
அளவுக்கு நீட்டிப்
பின்னர் (நபிக்குக் கிடைத்து
வரும் இறையருளைத்)
துண்டிக்க (முற்பட)ட்டுமே!
இந்த வழி தன்னை
ஆத்திர மூட்டச்
செய்ததைப் போக்குகிறதா
என்று பார்க்கட்டும்!