[22:56]
அந்நாளில்
எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத்
தான். அவன் அவர்களுக்கிடையில்
தீர்ப்பு வழங்குவான்; ஆகவே
ஈமான் கொண்டு
ஸாலிஹான (நல்ல)
செயல்களைச் செய்பவர்கள்
பாக்கியம் மிக்க
சவனபதிகளில் இருப்பார்கள்.
[22:57]
(ஆனால்)
எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப்
பொய்ப்பிக்க முற்பட்டார்களோ, அவர்களுக்குத்தான்
இழிவு மிக்க வேதனை
உண்டு.
[22:58]
இன்னும், எவர்கள்
அல்லாஹ்வுடைய பாதையில்
(தம் இருப்பிடங்களை
விட்டு) ஹிஜ்ரத்
செய்து பின்னர்
கொல்லப்பட்டோ அல்லது
இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு
அல்லாஹ் அழகிய
உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்)
உணவளிப்பவர்களிலெல்லாம்
நிச்சயமாக அல்லாஹ்வே
மிக்க மேலானவன்.
[22:59]
நிச்சயமாக
அவன் அவர்கள் விரும்பும்
இடத்தில் அவர்களை
பிரவேசிக்கச்
செய்வான்; மேலும்; நிச்சயமாக
அல்லாஹ் மிக அறிந்தவன், மிக்க
பொறுமையுடையவன்.
[22:60]
அது
(அப்படியே ஆகும்)
எவன் தான்
துன்புறுத்தப்படும்
அளவே (துன்புறுத்தியவனை)
தண்டித்து அதன்
பின் அவன் மீது கொடுமை
செய்யப்படுமானால்
நிச்சயமாக அல்லாஹ்
அவனுக்கு உதவி
செய்வான். நிச்சயமாக அல்லாஹ்
மிக்க மன்னிப்பவன்; பிழை
பொறுப்பவன்.
[22:61]
அது(ஏனென்றால்)
நிச்சயமாக அல்லாஹ்
இரவைப் பகலில்
புகுத்துகின்றான்; பகலை
இரவில் புகுத்துகிறான்; இன்னும்; நிச்சயமாக
அல்லாஹ் (எல்லாவற்றையும்)
கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
[22:62]
இது
(ஏனெனில்); நிச்சயமாக அல்லாஹ்தான்
உண்மை (இறைவன்)
மற்றும் அவனையன்றி
(வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ
- அது பொய்யாகும்; இன்னும்; நிச்சயமாக
அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும்
பெரியவன்.
[22:63]
நிச்சயமாக
அல்லாஹ் வானத்திலிருந்து
(மழை) நீரை இறக்குகிறான்; அதனால்
பூமி பசுமையாகி
விடுகிறது என்பதை
நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக
அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
[22:64]
வானங்களில்
உள்ளவையும், பூமியில்
உள்ளவையும் அவனுக்கே
உரியவனவாகும்; நிச்சயமாக
அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும்
புகழ் மிக்கோனாகவும்
இருக்கிறான்.