[22:65]
(நபியே)
நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக
அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால்
கடலில் செல்லும் கப்பல்களையும்
உங்களுக்கு வசப்படுத்தித்
தந்திருக்கின்றான், தன் அனுமதியின்றி பூமியின்
மீது வானம் விழுந்து
விடாதவாறு அவன்
தடுத்தும் கொண்டிருக்கிறான்.
நிச்சயமாக அல்லாஹ்
மனிதர்கள் மீது
மிக்க இரக்கமும், அன்பும்
உள்ளவன்.
[22:66]
இன்னும்; அவன்தான்
உங்களை வாழச்
செய்கிறான்; பிறகு
அவனே மரணம் அடையச்
செய்கிறான். அதன்
பின்னர் அவனே உங்களை
உயிர்ப்பிப்பவன்
(எனினும்) நிச்சயமாக
மனிதன் நன்றிகெட்டவனாக
இருக்கிறான்.
[22:67]
(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும்
வணக்க வழிபாட்டு
முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில்
அவர்கள் திடனாக
உம்மிடம் பிணங்க
வேண்டாம்; இன்னும்; நீர் (அவர்களை)
உம்முடைய இறைவன்
பக்கம் அழைப்பீராக!
நிச்சயமாக நீர் நேர்வழியில்
இருக்கின்றீர்.
[22:68]
(நபியே!) பின்னும்
அவர்கள் உம்மிடம்
தர்க்கம் செய்தால்; "நீங்கள்
செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று
(அவர்களிடம்) கூறுவீராக.
[22:69]
நீங்கள்
எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக்
கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி
அல்லாஹ் கியாம
நாளில் உங்களுக்கிடையே
தீர்ப்பளிப்பான்.
[22:70]
நிச்சயமாக
அல்லாஹ் வானத்திலும், பூமியிலும்
உள்ளவற்றை நன்கறிகிறான்
என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக
இவை(யெல்லாம்)
ஒரு புத்தகத்தில்
(பதிவு செய்யப்பட்டு)
இருக்கின்றன. நிச்சயமாக
இது அல்லாஹ்வுக்கு
மிகவும் சுலபமானது.
[22:71]
மேலும்; இவர்கள்
அல்லாஹ் அல்லாததை
வணங்குகின்றனர்; இதற்கு
அவன் எந்த விதமான
அத்தாட்சியையும்
இறக்கவில்லை இதைப்பற்றி
இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு
எவ்விதக் கல்வியாதாரமும்
இல்லை எனவே, இத்தகைய
அநியாயக்காரர்களுக்கு
உதவி செய்வோர்
இல்லை.
[22:72]
இன்னும்
அவர்கள் மீது நம்முடைய தெளிவான
வசனங்கள் ஓதிக்
காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய
முகங்களில் வெறுப்பை நீர்
அறிவீர்; அவர்களிடம்
நம் வசனங்களை ஓதிக்
காட்டுபவர்களை
அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். "இன்னும்
கொடூரமானதை நான்
உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
(அதுதான் நரக) நெருப்;பு அதனை
அல்லாஹ் காஃபிர்களுக்கு
வாக்களிக்கிறான்; மேலும்; அது மீளும்
இடங்களிலெல்லாம்
மிகவும் கெட்டது" என்று
(நபியே!) நீர் கூறுவீராக.