Al-Mu’minûn
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[23:1]
ஈமான்
கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி
பெற்று விட்டனர்.
[23:2]
அவர்கள்
எத்தகையயோரென்றால், தங்கள்
தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள்.
[23:3]
இன்னும், அவர்கள்
வீணான (பேச்சு, செயல்
ஆகிய)வற்றை விட்டு
விலகியிருப்பார்கள்.
[23:4]
ஜகாத்தையும்
தவறாது கொடுத்து வருவார்கள்.
[23:5]
மேலும், அவர்கள்
தங்களுடைய வெட்கத்
தலங்களைக் காத்துக்
கொள்வார்கள்.
[23:6]
ஆனால், அவர்கள்
தங்கள் மனைவிகளிடமோ
அல்லது தங்கள்
வலக்கரம் சொந்தமாக்கிக்
கொண்டவர்களிடமோ
தவிர - (இவர்களிடம்
உறவு கொள்வது கொண்டும்)
நிச்சயமாக அவர்கள்
பழிக்கப்படமாட்டார்கள்.
[23:7]
ஆனால், இதற்கு
அப்பால் (வேறு வழிகளை)
எவர் நாடுகிறாரோ
அ(த்தகைய)வர்கள்
தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
[23:8]
இன்னும், அவர்கள்
தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட)
அமானிப் பொருட்களையும், தங்கள்
வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
[23:9]
மேலும்
அவர்கள் தம் தொழுகைகளை(க்
குறித்த காலத்தில்
முறையோடு) பேணுவார்கள்.
[23:10]
இத்தகையோர்
தாம் (சவர்க்கத்தின்)
வாரிசுதாரர்கள்.
[23:11]
இவர்கள்
ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை)
அனந்தரங் கொண்டு
அதில் இவர்கள்
என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[23:12]
நிச்சயமாக
நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள
சத்தினால் படைத்தோம்.
[23:13]
பின்னர்
நாம் (மனிதனைப் படைப்பதற்காக)
அவனை ஒரு பாதுகாப்பன
இடத்தில் இந்திரியத்
துளியாக்கி வைத்தோம்.
[23:14]
பின்னர்
அந்த இந்திரியத் துளியை
அலக் என்ற நிலையில்
ஆக்கினோம்; பின்னர்
அந்த அலக்கை ஒரு
தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர்
அத்தசைப்பிண்டத்தை
எலும்புகளாகவும்
ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு
மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர்
நாம் அதனை வேறு
ஒரு படைப்பாக
(மனிதனாகச்) செய்தோம்.
(இவ்வாறு படைத்தவனான)
அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன்
(படைப்பாளர்களில்
எல்லாம்) மிக அழகான
படைப்பாளன்.
[23:15]
பிறகு, நிச்சயமாக
நீங்கள் மரணிப்பவர்களாக
இருக்கிறீர்கள்.
[23:16]
பிறகு, கியாம
நாளன்று, நிச்சயமாக
நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.
[23:17]
அன்றியும், உங்களுக்கு
மேலே ஏழு பதைகளைத்
திடனாக நாம் படைத்திருக்கிறோம்
- (நமது) படைப்பைக்
குறித்து நாம் எப்பொழுது
பராமுகமாக இருக்கவில்லை.