[23:60]
இன்னும்
எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள்
திரும்பிச் செல்லவேண்டியவர்கள்
என்று அஞ்சும்
நெஞ்சத்தினராய்
(நாம் கொடுத்ததிலிருந்து)
தங்களால் இயன்ற
மட்டும் (அல்லாஹ்வின்
பாதையில்) கொடுக்கிறார்களோ
அவர்களும்-
[23:61]
இ(த்தகைய)வர்கள்
தாம் நன்மைகளின்
பக்கம் விரைகின்றனர்; இன்னும்
அவற்றை (நிறைவேற்றி
வைப்பதில்) முந்துபவர்களாகவும்
இருப்பார்கள்.
[23:62]
நாம்
எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு
ஏற்றவாறு அல்லாமல்
(அதிகம் செய்யுமாறு)
நிர்ப்பந்திக்க
மாட்டோம்; மேலும்
உண்மையை பேசும்
ஒரு (பதிவுப்)
புத்தகம் நம்மிடம்
இருக்கிறது இன்னும் அவர்களுக்கு
(ஒரு சிறிதும்)
அநியாயம் செய்யப்பட
மாட்டாது.
[23:63]
ஆனால்
அவர்களுடைய இதயங்கள் இதைக்
குறித்து அறியாமையிலேயே
(ஆழ்ந்து) கிடக்கின்றன
இன்னும், அவர்களுக்கு இதுவன்றி
(வேறு தீய) காரியங்களும்
உண்டு. அதனை அவர்கள்
செய்து வருகிறார்கள்.
[23:64]
(இவ்வுலக)
சுகானுபவங்களில் மூழ்கிக்
கிடப்போரை நாம்
வேதனையைக் கொண்டு
பிடிக்கும்போது, உதவிக்காக
அவர்கள் அபயக்
குரல் எழுப்புவார்கள்.
[23:65]
இன்று
நீங்கள் உதவிக்காக
அபயக் குரலை எழுப்பாதீர்கள்; நிச்சயமாக, நீங்கள்
நம்மிடமிருந்து
உதவி செய்யப்பட
மாட்டீர்கள்.
[23:66]
என்னுடைய
வசனங்கள் நிச்சயமாக
உங்களுக்கு ஓதிக்
காண்பிக்கப்பட்டன
ஆனால் நீங்கள் புறங்காட்டிச்
சென்று கொண்டிருந்தீர்கள்.
[23:67]
ஆணவங்
கொண்டவர்களாக
இராக்காலத்தில்
கூடி குர்ஆனை பற்றி
கட்டுக்கதைகள்
போல் வீண்
வார்த்தையாடியவர்களாக
(அதைப் புறக்கணித்தீர்கள்
என்று அவர்களிடம் கூறப்படும்).
[23:68]
(குர்ஆனின்)
சொல்லைப் பற்றி
அவர்கள் சிந்தித்துப்
பார்க்கவில்லையா? அல்லது
தம் முன்னவர்களான
மூதாதையருக்கு
வராத ஒன்று அவர்களுக்கு
வந்துவிட்டதா?
[23:69]
அல்லது
அவர்கள் தங்களுடைய
(இறுதித்) தூதரைச்
சரிவர அறிந்து
கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய்
இருக்கின்றார்களா?
[23:70]
அல்லது, அவருக்குப்
பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று
அவர்கள் கூறுகிறார்களா? இல்லை
அவர் உண்மையைக்
கொண்டே அவர்களிடம்
வந்துள்ளார், எனினும் அவர்களில்
பெரும்பாலோர்
அந்த உண்மையையே
வெறுக்கிறார்கள்.
[23:71]
இன்னும்
அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப்
பின்பற்றி இருக்குமாயின்
நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும்
சீர்கெட்டுப்
போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு
நாம் நினைவூட்டும்
நல்லுபதேசமான
திக்ரை குர்ஆனை
அளித்தோம். எனினும்
அவர்கள் தங்களிடம் வந்த
திக்ரை குர்ஆனை
புறக்கணிக்கின்றனர்.
[23:72]
அல்லது
நீர் அவர்களிடம்
கூலி ஏதும்
கேட்கிறீரா? (இல்லை! ஏனெனில்)
உம்முடைய இறைவன்
கொடுக்கும் கூலியே
மிகவும் மேலானது இன்னும்
அளிப்பவர்களில்
அவனே மிக்க மேலானவன்.
[23:73]
மேலும், நிச்சயமாக
நீர் அவர்களை
ஸிராத்தும் முஸ்தகீம்
(நேரான வழியின்)
பக்கமே அழைக்கின்றீர்.
[23:74]
இன்னும்
எவர் மறுமையை நம்பவில்லையோ, நிச்சயமாக
அவர் அந்த (நேர்)
வழியை விட்டு விலகியவர்
ஆவார்.