[23:75]
ஆனால்
அ(த்தகைய)வர்கள்
மீது கிருபை
கொண்டு, அவர்களுக்கு
ஏற்பட்ட துன்பத்தை
நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக
தங்கள் வழிகேட்டிலேயே
அவர்கள் நீடிக்கின்றனர்.
[23:76]
திடனாக
நாம் அவர்களை வேதனையைக் கொண்டு
பிடித்திருக்கிறோம்; ஆனால், அவர்கள்
தங்கள் இறைவனுக்குப்
பணியவுமில்லை தாழ்ந்து
பிரார்;த்திக்கவுமில்லை.
[23:77]
எதுவரையிலெனின், நாம்
அவர்கள் மீது
கடும் வேதனையின்
வாயிலைத் திறந்து
விடுவோமானால், அவர்கள்
அதனால் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.
[23:78]
இன்னும்
அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும்
படைத்தவன்; மிகக்
குறைவாகவே அவனுக்கு
நீங்கள் நன்றி
செலுத்துகிறீர்கள்.
[23:79]
மேலும், அவன்தான்
உங்களை இப்பூமியில்
பல்கிப் பெருகச்
செய்தான்; இன்னும், அவனிடத்திலேயே
நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
[23:80]
அவனே
உயிர் கொடுக்கிறான்; இன்னும்
அவனே மரணிக்கச்
செய்கிறான்; மற்றும், இரவும்
பகலும் மாறி மாறி
வருவதும் அவனுக்குரியதே!
(இவற்றை) நீங்கள்
விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
[23:81]
மாறாக, முன்னிருந்தவர்கள் கூறியதைப்
போலவே, இவர்களும்
கூறுகிறார்கள்.
[23:82]
நாங்கள்
மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும்
ஆகிவிட்டாலுமா
நாங்கள் நிச்சயமாக
எழுப்பப்படுவோம்? என்று அவர்கள்
கூறினார்கள்.
[23:83]
மெய்யாகவே
முன்னர் நாங்கள் (அதாவது)
நாமும், எம் மூதாதையரும்
இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் இது முன்னுள்ளவர்களின்
கட்டுக் கதைகளே
அன்றி வேறில்லை
(என்றும் கூறிகின்றனர்).
[23:84]
'நீங்கள்
அறிந்திருந்தால், இப் பூமியும்
இதிலுள்ளவர்களும்
யாருக்கு(ச்
சொந்தம்? என்று
(நபியே!) நீர் கேட்பீராக!
[23:85]
அல்லாஹ்வுக்கே
என்று அவர்கள் கூறுவார்கள்; "(அவ்வாறாயின்
இதை நினைவிற்கொண்டு)
நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?" என்று
கூறுவீராக!
[23:86]
ஏழு
வானங்களுக்கு
இறைவனும் மகத்தான
அர்ஷுக்கு இறைவனும்
யார்? என்றும் கேட்பீராக.
[23:87]
அல்லாஹ்வுக்கே
என்று அவர்கள் சொல்வார்கள்; "(அவ்வாறாயின்)
நீங்கள் அவனுக்கு
அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று
கூறுவீராக!
[23:88]
எல்லாப்
பொருட்களின் ஆட்சியும் யார்
கையில் இருக்கிறது? யார்
எல்லாவற்றையும்
பாதுகாப்பவனாக
ஆனால் அவனுக்கு எதிராக
எவரும் பாதுகாக்கப்பட
முடியாதே அவன்
யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)
என்று கேட்பீராக.
[23:89]
அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே
(உரியது)" என்று
கூறுவார்கள்.
("உண்மை
தெரிந்தும்) நீங்கள்
ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று
கேட்பீராக.