[23:105]
என்னுடைய
வசனங்கள் உங்களுக்கு ஓதிக்
காண்பிக்கப்படவில்லையா? அப்போது
நீங்கள் அவற்றைப்
பொய்ப்பிக்கலானீர்கள் (என்று
கூறப்படும்)
[23:106]
எங்கள்
இறைவனே! எங்களை எங்களுடைய
துர்பாக்கியம்
மிகைத்துவிட்டது
நாங்கள் வழிதவறிய
கூட்டத்தினர் ஆகிவிட்டோம்
என்று அவர்கள்
கூறுவார்கள்.
[23:107]
எங்கள்
இறைவனே! நீ எங்களை
இ(ந் நரகத்)தை
விட்டு வெளியேற்றுவாயாக
திரும்பவும் (நாங்கள்
பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக
நாங்கள் அநியாயக்காரர்கள்!
(என்றும் கூறுவர்.)
[23:108]
(அதற்கவன்) "அதிலேயே இழிந்து கிடங்கள்;
என்னுடன்
பேசாதீர்கள்!"
என்று
கூறுவான்.
[23:109]
நிச்சயமாக
என்னுடைய அடியார்களில்
ஒரு பிரிவினர் "எங்கள்
இறைவா! நாங்கள்
உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள்
குற்றங்களை மன்னித்து, எங்கள்
மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம்
நீ மிகவும் மேலானவன்" என்று
பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.
[23:110]
அப்போது
நீங்கள் அவர்களைப் பரிகாசத்திற்கு
உரியவர்களாக ஆக்கிக்
கொண்டீர்கள், எது வரையெனின்
என் நினைவே உங்களுக்கு
மறக்கலாயிற்று
இன்னும் அவர்களைப்
பற்றி நீங்கள்
ஏளனமாக நகைத்துக் கொண்டும்
இருந்தீர்கள்.
[23:111]
நிச்சயமாக, அவர்கள்
பொறுமையாய் இருந்ததற்காக
அவர்களுக்கு நான்
(அதற்குரிய) நற்கூலியைக்
கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக
அவர்களே வெற்றியாளர்கள்!"
[23:112]
ஆண்டுகளின்
எண்ணிக்கையில் நீங்கள்
பூமியில் எவ்வளவு
(காலம்) இருந்தீர்கள்? என்று
கேட்பான்.
[23:113]
ஒரு
நாள் அல்லது ஒரு
நாளின் சிறிது
பாகம் நாங்கள்
தங்கியிருந்திருப்போம்.
(இதைப்பற்றிக்)
கணிப்பவர்களிடம்
நீ கேட்பாயாக!
என்று அவர்கள்
கூறுவார்கள்.
[23:114]
ஒரு
சொற்ப காலம் தவிர (பூமியில்
அதிகம்) நீங்கள்
தங்கவில்லை. நீங்கள்
(இதை) அறிந்திருந்தால்!
என்று (இறைவன்) கூறுவான்.
[23:115]
நாம்
உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக
என்றும், நீங்கள்
நம்மிடத்தில்
நிச்சயமாக மீட்டப்பட
மாட்டீர்கள் என்றும்
எண்ணிக் கொண்டீர்களா? (என்றும்
இறைவன் கேட்பான்.)
[23:116]
ஆகவே, உண்மையில்
அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத்
தவிர நாயனில்லை.
கண்ணியமிக்க அர்ஷின்
இறைவன் அவனே!
[23:117]
மேலும், எவன்
அல்லாஹ்வுடன் வேறு
நாயனைப் பிரார்த்திக்கிறானோ
அவனுக்கு அதற்காக
எவ்வித ஆதாரமும்
இல்லை அவனுடைய
கணக்கு அவனுடைய
இறைவனிடம்தான்
இருக்கிறது நிச்சயமாக
காஃபிர்கள் வெற்றி அடைய
மாட்டார்கள்.
[23:118]
இன்னும், "என் இறைவனே!
நீ என்னை மன்னித்துக்
கிருபை செய்வாயாக!
நீ தான் கிருபையாளர்களிலெல்லாம்
மிக்க மேலானவன்" என்று
(நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!