[2:220]
(மேல்கூறிய
இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும்
(என்ன பலன்களைத்
தரும் என்பதைப்
பற்றி நீங்கள்
தெளிவு பெறுவதற்காக
தன் வசனங்களை அவ்வாறு
விளக்குகிறான்.) "அநாதைகளைப்
பற்றி அவர்கள்
உம்மிடம் கேட்கின்றனர்;"
நீர்
கூறுவீராக "அவர்களுடைய காரியங்களைச்
சீராக்கி வைத்தல்
மிகவும் நல்லது. நீங்கள்
அவர்களுடன் கலந்து வசிக்க
நேரிட்டால் அவர்கள்
உங்கள் சகோதரர்களேயாவார்கள்;. இன்னும்
அல்லாஹ் குழப்பம்
உண்டாக்குபவனைச்
சரி செய்பவனின்றும்
பிரித்தறிகிறான்;. அல்லாஹ் நாடியிருந்தால்
உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்;. நிச்சயமாக
அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம்
மிக்கவன்."
[2:221]
(அல்லாஹ்வுக்கு)
இணைவைக்கும் பெண்களை-அவர்கள்
நம்பிக்கை கொள்ளும்
வரை- நீங்கள் திருமணம்
செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும்
ஒரு பெண், உங்களைக்
கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட
முஃமினான ஓர் அடிமைப்
பெண் நிச்சயமாக
மேலானவள். ஆவாள்; அவ்வாறே
இணைவைக்கும் ஆண்களுக்கு-
அவர்கள் நம்பிக்கை
கொள்ளும் வரை
(முஃமினான பெண்களுடன்)
நீங்கள் திருமணம்
செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும்
ஆண் உங்களுக்குக்
கவர்ச்சியூட்டுபவனாக
இருந்த போதிலும், ஒரு முஃமினான
அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய)
இவர்கள், உங்களை
நரக நெருப்பின்
பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால்
அல்லாஹ்வோ தன்
கிருபையால் சுவர்க்கத்தின்
பக்கமும், மன்னிப்பின்
பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள்
படிப்பினை பெருவதற்காக
தன் வசனங்களை
அவன் தெளிவாக விளக்குகிறான்.
[2:222]
மாதவிடாய்
பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்;. நீர்
கூறும்; "அது (ஓர் உபாதையான)
தீட்டு ஆகும்;. ஆகவே மாதவிடாயின்
போது பெண்களை விட்டும்
விலகியிருங்கள்.
அவர்கள் தூய்மையாகும்
வரை அவர்களை
அணுகாதீர்கள்;. அவர்கள்
தூய்மையடைந்த
பின் அல்லாஹ் எப்படி
கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி
அவர்களிடம் செல்லுங்கள்;. பாவங்களைவிட்டு
மீள்பவர்களை நிச்சயமாக
அல்லாஹ் நேசிக்கிறான்;. இன்னும்
தூய்மையாக இருப்போரையும்
நேசிக்கின்றான்."
[2:223]
உங்கள்
மனைவியர் உங்கள் விளைநிலங்கள்.
ஆவார்கள்; எனவே
உங்கள் விருப்பப்படி
உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள்
ஆத்மாக்களுக்காக
முற்கூட்டியே
(நற்கருமங்களின்
பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள்; (மறுமையில்)
அவனைச் சந்திக்க
வேண்டும் என்பதை
உறுதியாக அறிந்து
கொள்ளுங்கள். நம்பிக்கை
கொண்டவர்களுக்கு
நற்செய்தி கூறுவீராக!
[2:224]
இன்னும், நீங்கள்
அல்லாஹ்வைக் கொண்டு
சத்தியம் செய்வதனால், நீங்கள்
நற்கருமங்கள்
செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே
சமாதானம் செய்து
வைத்தல் போன்றவற்றில்
அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்;. அல்லாஹ்
யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும்
இருக்கின்றான்.