An-Nûr
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[24:1]
(இது திருக்குர்ஆனின்)
ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே
அருளச் செய்து, அதிலுள்ளவற்றை
விதியாக்கினோம்; நீங்கள்
நல்லுபதேசம் பெறுவதற்காக
இதில் நாம் தெளிவான
வசனங்களை அருள்
செய்தோம்.
[24:2]
விபசாரியும், விபசாரனும்
இவ் விருவரில்
ஒவ்வொருவரையும்
நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின்
மீதும், இறுதி நாள்
மீதும் ஈமான் கொண்டவர்களாக
இருந்தால். அல்லாஹ்வின்
சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர்
மீதும் உங்களுக்கு
இரக்கம் ஏற்பட
வேண்டாம்; இன்னும்
அவ்விருவரின்
வேதனையையும் முஃமின்களில்
ஒரு கூட்டத்தார் (நேரில்)
பார்க்கட்டும்.
[24:3]
விபசாரன், விபசாரியையோ
அல்லது இணை வைத்து
வணங்குபவiளையோ
அன்றி வேறு எந்தப்
பெண்ணையும் விவாகம்
செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ
அல்லது இணை வைத்து
வணங்குபவனையோ
அன்றி (வேறுயாரையும்) விவாகம்
செய்ய மாட்டாள்
இது முஃமின்களுக்கு
விலக்கப்பட்டிருக்கிறது.
[24:4]
எவர்கள்
கற்புள்ள பெண்கள்
மீது அவதூறு
கூறி (அதை நிரூபிக்க)
நான்கு சாட்சிகளைக்
கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள்
எண்பது கசையடி
அடியுங்கள்; பின்னர்
அவர்களது சாட்சியத்தை
எக்காலத்திலும் ஏற்றுக்
கொள்ளாதீர்கள்
நிச்சயமாக அவர்கள்தான்
தீயவர்கள்.
[24:5]
எனினும்
(இவர்களில்) எவர் இதற்குப்
பின்னர் தவ்பா
செய்து கொண்டு
(தங்களைத்) திருத்திக்
கொள்கிறார்களோ நிச்சயமாக
அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை
செய்பவனாகவும்
இருக்கின்றான்.
[24:6]
எவர்கள்
தம் மனைவிமார்களை அவதூறு
கூறி (அதை நிரூபிக்கத்)
தங்களையன்றி அவர்களிடம்
வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால்
அவன், நிச்சயமாக
தாம் உண்மையே கூறுவதாக
அல்லாஹ்வின்மீது
நான்கு முறை
சத்தியம் செய்து
கூறி
[24:7]
ஐந்தாவது
முறை, "(இதில்) தான்
பொய் சொல்வதாக
இருந்தால், நிச்சயமாக
அல்லாஹ்வுடைய
சாபம் தன்மீது உண்டாகட்டும்" என்றும்
(அவன் கூற வேண்டும்).
[24:8]
இன்னும்
(அவனுடைய மனைவி குற்றத்தை
மறுத்து) தன் மீதுள்ள
தண்டனையை விலக்க, "நிச்சயமாக
அவன் பொய்யர்களில்
நின்றுமுள்ளவன்" என்று
அல்லாஹ்வின் மீது
சத்தியம் செய்து நான்கு
முறை கூறி
[24:9]
ஐந்தாவது
முறை, "அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால்
நிச்சயமாக அல்லாஹ்வுடைய
கோபம் தன்மீது
உண்டாவதாக என்றும்
(அவள் கூற வேண்டும்).
[24:10]
இன்னும்
உங்கள் மீது அல்லாஹ்வுடைய
நல்லருளும், அவனுடைய
ரஹ்மத்தும் இல்லாது
போயிருப்பின், (உங்களுக்கு அழிவு
உண்டாயிருக்கும்;) நிச்சயமாக
அல்லாஹ் தவ்பாவை
ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும்
இருக்கின்றான்.