[24:21]
ஈமான்
கொண்டவர்களே! ஷைத்தானுடைய
அடிச்சுவடுகளை
நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும்
எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப்
பின்பற்றுகிறானோ
அவனை, ஷைத்தான் மானக்
கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய)
நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள்
மீது அல்லாஹ்வின்
அருளும், அவனுடைய
ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில்
எவரும் எக்காலத்திலும்
(தவ்பா செய்து)
தூய்மையயடைந்திருக்க
முடியாது - எனினும்
தான் நாடியவர்களை
அல்லாஹ் துய்மைப்
படுத்துகிறான்
- மேலும் அல்லாஹ்
(யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும்
இருக்கின்றான்.
[24:22]
இன்னும், உங்களில்
(இறைவனின்) கொடை
அருளப் பெற்றவர்களும், தக்க
வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை
விட்டு) அல்லாஹ்வின்
பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும்
(எதுவும்) கொடுக்க
முடியாது என்று
சத்தியம் செய்ய
வேண்டாம்; (அவர்கள்
தவறு செய்திருப்பின்)
அதை மன்னித்து
(அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ்
உங்களை மன்னிக்க
வேண்டும் என்று
நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும்
அல்லாஹ் (பிழை
பொறுப்பவன்) மிக
மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.
[24:23]
எவர்கள்
முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை
பெண்கள் மீது அவதூறு
செய்கிறார்களோ, அவர்கள்
நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும்
சபிக்கப்பட்டவர்கள்; இன்னும்
அவர்களுக்குக்
கடுமையான வேதனையுமுண்டு.
[24:24]
அந்நாளில்
அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய
கைகளும், அவர்களுடைய
கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை
பற்றி சாட்சியம்
கூறும்.
[24:25]
அந்நாளில்
அல்லாஹ் அவர்களுக்குரிய
நியாயமான கூலியை, அவர்களுக்குப்
பூரணமாகக் கொடுப்பான்; இன்னும் அல்லாஹ்
தான் "பிரத்தியட்சமான
உண்மை(யாளன்) என்பதை
அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
[24:26]
கெட்ட
பெண்கள் கெட்ட ஆண்களுக்கும்
கெட்ட ஆண்கள் கெட்ட
பெண்களுக்கும்
இன்னும், நல்ல
தூய்மையுடைய பெண்கள், நல்ல
தூய்மையான ஆண்களுக்கும்
நல்ல தூய்மையான
ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுகு;கும்
(தகுதியானவர்கள்.)
அவர்கள் கூறுவதை
விட்டும் இவர்களே தூய்மையானவர்கள்.
இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான
உணவுமுண்டு.
[24:27]
ஈமான்
கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத
(வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம்
அனுமதி பெற்று, அவர்களுக்கு
ஸலாம் சொல்லாதவரை
(அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள்
- (அவ்வாறு நடப்பதுவே)
உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள்
நற்போதனை பெறுவதற்கு
(இது உங்களுக்குக்
கூறப்படுகிறது).