[25:56]
இன்னும்
(நபியே!) நாம் உம்மை நன்மாராயங்
கூறுபவராகவும், அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவராகவுமே
அல்லாமல் அனுப்பவில்லை.
[25:57]
அதற்காக
நான் உங்களிடம்
எந்தக் கூலியையும்
கேட்கவில்லை -
விருப்பமுள்ளவர்
தம் இறைவனிடத்து(ச்
செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக்
கொள்ளட்டும் என்பதைத்
தவிர என்று (நபியே!)
நீர் கூறும்.
[25:58]
எனவே
மரிக்கமாட்டானே
அந்த நித்திய
ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன்
மீதே முற்றிலும்
நம்பிக்கை வைப்பீராக.
இன்னும் அவன்
புகழைக் கொண்டு
(அவனைத்) துதி செய்து
கொண்டிருப்பீராக
இன்னும் அவன் தன் அடியார்களின்
பாவங்களை அறிந்தவனாக
இருப்பதே போதுமானதாகும்.
[25:59]
அவனே
வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும்
ஆறு நாட்களில்
படைத்தான்;. பின்னர் அவன்
அர்ஷின் மீது அமைந்தான்.
(அவன் தான் அருள்
மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம்
அவனைப் பற்றிக்
கேட்பீராக.
[25:60]
இன்னும்
அர்ரஹ்மானுக்கு நீங்கள்
ஸஜ்தா செய்யுங்கள்' என்று
அவர்களுக்குக்
கூறப்பட்டால் "அர்ரஹ்மான் என்பவன்
யார்? நீர் கட்டளையிடக்
கூடியவனுக்கு
நாங்கள் ஸஜ்தா
செய்வோமா?" என்று
கேட்கிறார்கள்; இன்னும், இது அவர்களுக்கு
வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது.
[25:61]
வான
(மண்டல)த்தில்
கோளங்கள் சுழன்று
வரும் பாதைகளை
உண்டாக்கி, அவற்றிடையே
ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும்
உண்டாக்கினானே
அவன் பாக்கியமுள்ளவன்.
[25:62]
இன்னும்
சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது
நன்றி செலுத்த
விரும்புபவருக்கு
அவன்தான் இரவையும், பகலையும்
அடுத்தடுத்து
வருமாறு ஆக்கினான்.
[25:63]
இன்னும்
அர்ரஹ்மானுடைய அடியார்கள்
(யாரென்றால்) அவர்கள்தாம்
பூமியில் பணிவுடன்
நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன்
பேசி(வாதா)ட முற்பட்டால் "ஸலாம்" (சாந்தியுண்டாகட்டும் என்று)
சொல்லி (விலகிப்
போய்) விடுவார்கள்.
[25:64]
இன்னும், அவர்கள்
தங்கள் இறைவனை
ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும்
வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே
அவர்கள்.
[25:65]
எங்கள்
இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின்
வேதனையைத் திருப்புவாயாக
நிச்சயமாக அதன்
வேதனை நிரந்தரமானதாகும்
என்று கூறுவார்கள்.
[25:66]
நிச்சயமாக
அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும்
மிகக் கெட்ட இடமாகும்.
[25:67]
இன்னும், அவர்கள்
செலவு செய்தால்
வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்)
குறைக்கவும் மாட்டார்கள்
- எனினும், இரண்டுக்கும்
மத்திய நிலையாக
இருப்பார்கள்.