[26:112]
அவர்
கூறினார்; அவர்கள்
என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள்
என்பதைப் பற்றி
நான் அறியமாட்டேன்.
[26:113]
நீங்கள்
அறிய்ககூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய
கேள்வி கணக்கு
(பற்றிய விசாரணை)
என்னுடைய இறைவனிடம்
தான் இருக்கிறது.
[26:114]
முஃமின்களை
நான் விரட்டி விடுபவன்
அல்லன்.
[26:115]
நான்
பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி
வேறில்லை.
[26:116]
அதற்கவர்கள்
கூறினார்கள்; "நூஹே!
நீர் (உம் பிரச்சாரத்தை
விட்டும்) விலகிக்
கொள்ளாவிட்டால், நிச்சயமாக
நீர் கல்லாலெறிந்து
கொல்லப்படுவீர்" என்று
கூறினார்கள்.
[26:117]
அவர்
கூறினார்; "என் இறைவனே!
என்னுடைய சமூகத்தார்கள்
நிச்சயமாக என்னைப்
பொய்யாக்கி விட்டார்கள்.
[26:118]
ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு
மிடையே தீர்ப்புச்
செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும்
இரட்சிப்பாயாக!" (என்று பிரார்த்தித்தார்.)
[26:119]
ஆகவே, நாம்
அவரையும் அவருடனிருந்தவர்களையும்
நிறைந்திருந்த
கப்பலில் இரட்சித்தோம்.
[26:120]
அதன்
பிறகு, எஞ்சியிருந்தவர்களை
நாம் மூழ்கடித்தோம்.
[26:121]
நிச்சயமாக
இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும்
அவர்களில் பெரும்
பாலோர் ஈமான் கொள்வதில்லை.
[26:122]
நிச்சயமாக
உம்முடைய இறைவன் (யாவரையும்)
மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும்
இருக்கின்றான்.
[26:123]
ஆது
(கூட்டத்தினரும், இறை) தூதர்களைப்
பொய்ப்பித்தனர்.
[26:124]
அவர்களிடம்
அவர்களுடைய சகோதரர் ஹூது "நீங்கள்
(இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று
கூறியபோது
[26:125]
நிச்சயமாக
நான் உங்களுக்கு
நம்பிக்கைக்குரிய
(இறை) தூதன் ஆவேன்.
[26:126]
மேலும், இதற்காக
நான் உங்களிடம்
யாதொரு கூலியும்
கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய
கூலி அகிலங்களின்
இறைவனிடமே இருக்கிறது.
[26:127]
நீங்கள்
ஒவ்வோர் உயரமான
இடத்திலும் வீணாக
சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?
[26:128]
இன்னும், நீங்கள்
நிரந்தரமாக இருப்போம்
என்று, (அழகிய வேலைப்பாடுகள்
மிக்க) மாளிகைகளை
அமைத்துக் கொள்கின்றீர்களா?
[26:129]
இன்னும், நீங்கள்
(எவரையும் ஏதுங்
குற்றங்களுக்காகப்)
பிடித்தால் மிகவும் கொடியவர்கள்
போல் பிடிக்கின்றீர்கள்.
[26:130]
எனவே, நீங்கள்
அல்லாஹ்வுக்கு
அஞ்சங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.
[26:131]
மேலும், நீங்கள்
அறிந்திருக்கும்
(பாக்கியமான பொருள்களையெல்லாம்
கொண்டு) உங்களுக்கு
உதவியளித்தவனை
அஞ்சுங்கள்.
[26:132]
அவன்
உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை
போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும்
கொண்டு உதவியளித்தான்.
[26:133]
இன்னும்
தோட்டங்களையும், நீரூற்றுக்களையும்
(கொண்டு உதவியளித்தான்).
[26:134]
நிச்சயமாக
நான் உங்கள் மீது மகத்தான
நாளின் வேதனைப்
பற்றி அஞ்சுகிறேன்
(எனக் கூறினார்).
[26:135]
(இதற்கு)
அவர்கள்; "நீர் எங்களுக்கு
உபதேசம் செய்தாலும்
அல்லது நீர் எங்களுக்கு
உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும்
(இரண்டுமே) எங்களுக்கு
சமம்தான்" எனக் கூறினார்கள்.
[26:136]
இது
முன்னவர்களின்
வழக்கமேயன்றி
(வேறு) இல்லை.