[26:160]
அவர்களிடம்
அவர்களுடைய சகோதரர் லூத்; "நீங்கள்
(இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று
கூறியபோது,
[26:161]
நிச்சயமாக, நான்
உங்களுக்கு நம்பிக்கைக்குரிய
(இறை) தூதனாவேன்.
[26:162]
ஆகவே, நீங்கள்
அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள்; எனக்கும்
வழிப்படுங்கள்.
[26:163]
மேலும், இதற்காக
நான் உங்களிடம்
யாதொரு கூலியும்
கேட்கவிலலை. நிச்சயமாக
எனக்குரிய கூலி
அகிலங்களின் இறைவனிடமே
இருக்கிறது.
[26:164]
உலகத்தார்களில்
நீங்கள் ஆடவர்களிடம்
(கெட்ட நோக்கோடு)
நெருங்குகின்றீர்களா?
[26:165]
இன்னும், உங்கள்
இறைவன் உங்களுக்காகப்
படைத்துள்ள உங்கள்
மனைவிமார்களை
விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள்
வரம்பு கடந்த சமூகத்தாராக
இருக்கின்றீர்கள்.
[26:166]
அதற்கவர்கள்; "லூத்தே (இப்பேச்சையெல்லாம்
விட்டு) நீர் விலகிக்
கொள்ளாவிட்டால், நிச்சயமாக
நீர் (இங்கிருந்து)
வெளியேற்றப்படுவீர்" எனக்
கூறினர்.
[26:167]
அவர்
கூறினார்; "நிச்சயமாக
நான் உங்கள் செயல்களைக்
கடுமையாக வெறுப்பவனாக
இருக்கிறேன்.
[26:168]
என்
இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும்
இவர்கள் செய்து
கொண்டிருக்கிற
(தீய)வற்றிலிருந்து
காப்பாயாக! (எனப் பிரார்த்தித்தார்.)
[26:169]
அவ்வாறே, நாம்
அவரையும், அவர் குடும்பத்தாரையும்
யாவரையும் காத்துக்
கொண்டோம்.
[26:170]
(அழிந்து
போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட
கிழவியைத் தவிர
[26:171]
பின்னர்
நாம் மற்றவர்களை அழித்து
விட்டோம்.
[26:172]
இன்னும், நாம்
அவர்கள் மீது (கல்) மாரி
பொழியச் செய்தோம்.
அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட
(ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள்
மீது (அக்கல்) மாரி
மிகவும் கெட்டதாக
இருந்தது.
[26:173]
நிச்சயமாக
இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது
எனினும் அவர்களில்
பெரும்பாலோர்
நம்பிக்கை கொள்வதில்லை.
[26:174]
மேலும், நிச்சயமாக
உம்முடைய இறைவன்
(யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபை
உடையவனாகவும்
இருக்கின்றான்.
[26:175]
தோப்பு
வாசிகளும் (இறை) தூதர்களைப்
பொய்ப் படுத்தினார்கள்.
[26:176]
ஷுஐப்
அவர்களிடம்; "நீங்கள்
(இறைவனுக்கு) அஞ்ச
மாட்டீர்களா?" எனக்
கூறியபோது
[26:177]
நிச்சயமாக
நான் உங்களுக்கு
நம்பிக்கைக்குரிய
(இறை) தூதனாவேன்.
[26:178]
ஆகவே, அல்லாஹ்வுக்கு
அஞ்சங்கள்; எனக்கும்
வழிப்படுங்கள்.
[26:179]
மேலும், இதற்காக
நான் உங்களிடம்
யாதொரு கூலியும்
கேட்கவில்லை நிச்சயமாக
எனக்குரிய கூலி
அகிலங்களின் இறைவனிடமே
இருக்கிறது.
[26:180]
அளவையை
நிறைவாக அளவுங்கள்; (அளவையைக்)
குறைப்பவர்களாக
இராதீர்கள்.
[26:181]
நேரான
தாராசைக் கொண்டு
நிறுத்துக் கொடுங்கள்.
[26:182]
மனிதர்களுக்கு
கொடுக்க வேண்டிய
பொருட்களை நீங்கள்
குறைத்து விடாதீர்கள்
- மேலும், நீங்கள்
பூமியில் குழப்பம்
செய்பவர்களாக
அலையாதீர்கள்.
[26:183]
அன்றியும், உங்களையும், உங்களுக்கு
முன்னாலிருந்த
படைப்புகளையும்
படைத்த அவனுக்கே
அஞ்சங்கள் (எனக் கூறினார்.)