[26:184]

அவர்கள் சொன்னார்கள்; "நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.

[26:185]

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம்.

[26:186]

எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால், வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படிச் செய்யும்."

[26:187]

நீங்கள் செய்து கொண்டிருப்பதை என் இறைவன் நன்கறிவான் என்று அவர் கூறினார்.

[26:188]

பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர் ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.

[26:189]

நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

[26:190]

மேலும், நிச்சயமாக உம் இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

[26:191]

மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.

[26:192]

ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரயீல்) இதைக் கொண்டு இறங்கினார்.

[26:193]

(நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) -

[26:194]

தெளிவான அரபி மொழியில்.

[26:195]

நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது.

[26:196]

பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை(ப் பற்றி நன்கு) அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?

[26:197]

இன்னும், நாம் இதனை அரபி (மொழி) அல்லாதவர்களில் ஒருவர் மீது இறக்கி வைத்திருப்போமாயின்;

[26:198]

அவரும் இதை அவர்களுக்கு ஓதிக் காட்டி இருப்பாராயின் அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டோராக இருக்க மாட்டார்கள்.

[26:199]

இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம்.

[26:200]

நோவினை செய்யும் வேதனையைக் காணும் வரை, அவர்கள் அதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

[26:201]

எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும்.

[26:202]

அப்பொழுது அவர்கள்; "எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?" என்று கேட்பார்கள்.

[26:203]

நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?

[26:204]

நீர் பார்த்தீரா? நாம் அவர்களை(ப் பல)ஆண்டுகள் வரை (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருக்கச் செய்தாலும்,

[26:205]

பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-

[26:206]

பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-