[26:207]
அவர்கள்
(இவ்வுலகில்) சுகித்துக்
கொண்டிருந்தது
அவர்களுக்குப்
பயன்தாராது.
[26:208]
இன்னும்
எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள்
இல்லாமல் நாம்
அழித்ததில்லை.
[26:209]
ஞாபக
மூட்டுவதற்காகவே (நபிமார்கள்
வந்தார்கள்) - நாம்
அநியாயம் செய்பவராக
இருக்கவில்லை.
[26:210]
இன்னும், ஷைத்தான்கள்
இ(வ் வேதத்)தைக்
கொண்டு இறங்கவில்லை.
[26:211]
மேலும், அது அவர்களுக்கு தகுதியுமல்ல
(அதற்கு) அவர்கள்
சக்தி பெறவும்
மாட்டார்கள்.
[26:212]
நிச்சயமாக
ஷைத்தான்கள் (இதைக்) கேட்பதிலிருந்தும்
ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
[26:213]
ஆதலின்
அல்லாஹ்வுடன்
வேறெரு நாயனை
அழைக்காதீர்; அவ்வாறு
(செய்வீர்) ஆயின், வேதனை
செய்யப்படுபவர்களில் ஒருவராக
நீர் ஆகிவிடுவீர்.
[26:214]
இன்னும், உம்முடைய
நெருங்கிய உறவினர்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை
செய்வீராக!
[26:215]
மேலும், உம்மைப்
பின்பற்றி நடக்கும்
முஃமின்களிடத்தில்
தோள் தாழ்த்தி
(க் கனிவுடன்) நடந்துக்கொள்வீராக
[26:216]
ஆனால், அவர்கள்
உமக்கு மாறு செய்வார்களாயின்; "நீங்கள்
செய்வதை விட்டும்
நான் விலகிக் கொண்டேன்" என்று
கூறிவிடுவீராக!
[26:217]
இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை
மிக்கவனும் ஆகிய
(இறை)வனிடமே முழு
நம்பிக்கை வைப்பீராக!
[26:218]
அவன், நீர்
(தனித்து வணங்குவதற்காக)
நிற்கும்போது, உம்மைப்
பார்க்கிறான்.
[26:219]
இன்னும், ஸஜ்தா
செய்வோருடன் நீர்
இயங்குவதையும்
(அவன் பார்க்கிறான்)
[26:220]
நிச்சயமாக
அவன் (யாவற்றையும்) செவியேற்பவன், மிக அறிபவன்.
[26:221]
எவர்கள்
மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள்
என்பதை நான் உமக்கு
அறிவிக்கட்டுமா?
[26:222]
பெரும்
பொய்யனான ஒவ்வொரு பாவியின்
மீதும் அவர்கள்
இறங்குகிறார்கள்.
[26:223]
தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம்
(ஷைத்தான்களை
அவர்களின் காதுகளில்)
போடுகிறார்கள்; இன்னும்
அவர்களில் பெரும்
பாலோர் பொய்யர்களே.
[26:224]
இன்னும்
புலவர்கள் (எத்தகையோரென்றால்)
அவர்களை வழிகேடர்கள்
தாம் பின்பற்றுகிறார்கள்.
[26:225]
நிச்சயமாக
அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும்
(பாதையிலும்) அலைந்து
திரிவதை (நபியே!)
நீர் பார்க்கவில்லையா?
[26:226]
இன்னும்
நிச்சயமாக, தாங்கள் செய்யாததைச்
(செய்ததாக) அவர்கள்
சொல்லுகிறார்கள்.
[26:227]
ஆனால், எவர்கள்
ஈமான் கொண்டு, (ஸாலிஹான)
நற்செயல்கள் செய்து
அல்லாஹ்வை அதிகமாக
தியானம் செய்து
(தங்களுக்கு) அநியாயம்
செய்யப்பட்ட பின்னர்
(அதற்காக) பழிதீர்த்துக்
கொண்டார்களோ அவர்களைத் தவிர
(மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்)
அநியாயம் செய்தவர்கள், தாங்கள்
எங்கு திரும்பச் செல்லவேண்டு
மென்பதையும் திட்டமாக(ப்
பின்னர்) அறிந்து
கொள்வார்கள்.