An-Naml
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[27:1]
தா, ஸீன்.
இவை குர்ஆனுடைய தெளிவான
வேதத்துடைய - வசனங்களாகும்.
[27:2]
(இது) முஃமின்களுக்கு
நேர்வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும்
இருக்கிறது.
[27:3]
(அவர்கள்
எத்தகையோரென்றால்) அவர்கள்
தொழுகையை நிலை
நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக்
கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள்
மறுமை வாழ்வின்
மீது திட நம்பிக்கை
கொள்வார்கள்.
[27:4]
நிச்சயமாக
எவர்கள் மறுமை வாழ்வில்
நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு
நாம் அவர்களுடைய
செயல்களை அழகாக(த்
தோன்றுமாறு) செய்தோம்; எனவே
அவர்கள் தட்டழிந்து
திரிகிறார்கள்.
[27:5]
அத்தகையவர்களுக்குத்
தீய வேதனை உண்டு
மறுமை வாழ்வில்
அவர்கள் பெரும்
நஷ்டமடையவர்களாக
இருப்பார்கள்.
[27:6]
(நபியே!) நிச்சயமாக
மிக்க ஞானமுடைய
(யாவற்றையும்)
நன்கறிந்தவனிடமிருந்து
இந்த குர்ஆன் உமக்குக்
கொடுக்கப் பட்டுள்ளது.
[27:7]
மூஸா
தம் குடும்பத்தாரை நோக்கி; "நிச்சயமாக
நான் நெருப்பைக்
காண்கிறேன்; உங்களுக்கு
நான் அதிலிருந்து
(நாம் செல்ல வேண்டிய
வழி பற்றிய) செய்தியைக்
கொண்டு வருகிறேன், அல்லது
நீங்கள் குளிர்காயும்
பொருட்டு (உங்களுக்கு
அதிலிருந்து) நெருப்புக் கங்கைக்
கொண்டு வருகிறேன்" என்று
கூறியதை (நபியே!)
நினைவு கூர்வீராக!
[27:8]
அவர்
அதனிடம் வந்த போது "நெருப்பில்
இருப்பவர் மீதும், அதனைச்
சூழ்ந்திருப்பவர்
மீதும் பெரும் பாக்கயம்
அளிக்கப் பெற்றுள்ளது
மேலும் அகிலங்களுக்கெல்லாம்
இறைவனாகிய அல்லாஹ் மிகவும்
பரிசுத்தமானவன்" என்று
அழைக்கப்பட்டார்.
[27:9]
மூஸாவே!
நிச்சயமாக நானே
அல்லாஹ்! (யாவரையும்)
மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
[27:10]
உம்
கைத்தடியைக் கீழே
எறியும்;" (அவ்வாறே
அவர் அதை எறியவும்)
அது பாம்புபோல்
நெளிந்ததை அவர்
கண்ட பொழுது, திரும்பிப்
பார்க்காது (அதனை
விட்டு) ஓடலானார் "மூஸாவே!
பயப்படாதீர்! நிச்சயமாக
(என்) தூதர்கள்
என்னிடத்தில் பயப்பட
மாட்டார்கள்."
[27:11]
ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர
அ(த்தகைய)வரும்
(தாம் செய்த) தீமையை
(உணர்ந்து அதை)
நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக
நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க
கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.
[27:12]
'இன்னும்
உம்முடைய கையை
உமது (மார்புபக்கமாக)
சட்டைப் பையில்
நுழையப்பீராக!' அது ஒளி
மிக்கதாய் மாசற்ற வெண்மையாக
வெளிவரும். (இவ்விரு
அத்தாட்சிகளும்)
ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும்
(நீர் காண்பிக்க
வேண்டிய) ஒன்பது
அத்தாட்சிகளில்
உள்ளவையாகும்; நிச்சயமாக
அவர்கள் பாவம்
செய்யும் சமூகத்தாராக
இருக்கின்றனர்.
[27:13]
இவ்வாறு, நம்முடைய
பிரகாசமான அத்தாட்சிகள்
அவர்களிடம் வந்த
போது, அவர்கள் "இது பகிரங்கமான சூனியமேயாகும்" என்று
கூறினார்கள்.