[27:14]
அவர்களுடைய
உள்ளங்கள் அவற்றை (உண்மையென)
உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை
கொண்டவர்களாகவும் அவர்கள்
அவற்றை மறுத்தார்கள்.
ஆனால், இந்த விஷமிகளின்
முடிவு என்னவாயிற்று என்பதை
நீர் கவனிப்பீராக.
[27:15]
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக
நாம் கல்வி ஞானத்தைக்
கொடுத்தோம்; அதற்கு
அவ்விருவரும்; "புகழ் அனைத்தும்
அல்லாஹ்வுக்கே
உரியது அவன் தான், முஃமின்களான
தன் நல்லடியார்களில் அநேகரைவிட
நம்மை மேன்மையாக்கினான்" என்று
கூறினார்கள்.
[27:16]
பின்னர், ஸுலைமான்
தாவூதின் வாரிசானார்
அவர் கூறினார்; "மனிதர்களே!
பறவைகளின் மொழி
எங்களுக்குக் கற்றுக்
கொடுக்கப்பட்டிருக்கிறது
மேலும், நாங்கள் எல்லா
விதப் பொருள்களிலிருந்தும்
(ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக
இது தெளிவான அருள்
கொடையாகும்.
[27:17]
மேலும்
ஸுலைமானுக்கு
ஜின்கள் மனிதர்கள்
பறவைகள் ஆகியவற்றிலிருந்து
அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்)
பிரிக்கப்பட்டுள்ளன.
[27:18]
இறுதியாக, எறும்புகள்
நிறைந்த இடத்திற்கு
அவர்கள் வந்த போது
ஓர் எறும்பு (மற்ற
எறும்புகளை நோக்கி) "எறும்புகளே!
நீங்கள் உங்கள்
புற்றுகளுக்குள்
நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும்
அவருடைய சேனைகளும், அவர்கள்
அறியாதிருக்கும்
நிலையில் உங்களை
நசுக்கி விடாதிருக்கும்
பொருட்டு (அவ்வாறு
செய்யுங்கள்)" என்று
கூறிற்று.
[27:19]
அப்போது
அதன் சொல்லைக்
கேட்டு, அவர் புன்னகை
கொண்டு சிரித்தார்.
இன்னும், "என் இறைவா!
நீ என் மீதும், என் பெற்றோர்
மீதும் புரிந்துள்ள
உன் அருட்கொடைகளுக்காக, நான்
நன்றி செலுத்தவும், நீ பொருந்திக்
கொள்ளும் விதத்தில்
நான் நன்மைகள்
செய்யவும், எனக்கு
அருள் செய்வாயாக! இன்னும்
உம் கிருபையைக்
கொண்டு என்னை உன்னுடைய
நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று
பிரார்த்தித்தார்.
[27:20]
அவர்
பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை
செய்து "நான் (இங்கே)
ஹுது ஹுது(ப் பறவையைக்)
காணவில்லையே என்ன காரணம்? அல்லது
அது மறைந்தவற்றில்
நின்றும் ஆகி விட்டதோ?" என்று
கூறினார்.
[27:21]
நான்
நிச்சயமாக அதைக்
கடுமையான வேதனையைக்
கொண்டு வேதனை செய்வேன்; அல்லது
அதனை நிச்சயமாக
அறுத்து விடுவேன்; அல்லது
(வராததற்கு) அது
என்னிடம் தெளிவான
ஆதாரத்தைக் கொண்டு
வர வேண்டும் என்றும் கூறினார்.
[27:22]
(இவ்வாறு
கூறி) சிறிது நேரம் தாமதித்தார்
அதற்குள் (ஹுது
ஹுது வந்து) கூறிற்று "தாங்கள்
அறியாத ஒரு விஷயத்தை
நான் அறிந்து கொண்டேன். 'ஸபா'விலிருந்து
உம்மிடம் உறுதியான
செய்தியைக் கொண்டு
வந்திருக்கிறேன்."