[27:36]
அவ்வாறே
(தூதர்கள்) ஸுலைமானிடம்
வந்தபோது அவர்
சொன்னார்; "நீங்கள்
எனக்குப் பொருளைக்
கொண்டு உதவி
செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ்
எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன்
கொடுத்திருப்பதை
விட மேலானதாகும்; எனினும், உங்கள்
அன்பளிப்பைக்
கொண்டு நீங்கள்
தான் மகிழ்ச்சி
அடைகிறீர்கள்!
[27:37]
அவர்களிடமே
திரும்பிச் செல்க நிச்சமயாக
நாம் அவர்களால்
எதிர்க்க முடியாத
(பலமுள்ள) ஒரு பெரும்
படையைக் கொண்டு அவர்களிடம்
வருவோம்; நாம்
அவர்களைச் சிறுமைப்
படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும்
அவர்கள் இழிந்தவர்களாவார்கள்
(என்று ஸுலைமான் கூறினார்).
[27:38]
பிரமுகர்களே!
அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக
வருமுன், உங்களில்
யார் அவளுடைய அரியாசனத்தை
என்னிடம் கொண்டுவருபவர்? என்று
(ஸுலைமான் அவர்களிடம்)
கேட்டார்.
[27:39]
ஜின்களில்
(பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத்
கூறிற்று: நீங்கள்
உங்கள் இடத்திலிருந்து
எழுந்திருப்பதற்கு
முன் அதை நான்
உங்களிடம் கொண்டு
வந்து விடுவேன்; நிச்சயமாக
நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு
உரியவனாகவும்
இருக்கிறேன்."
[27:40]
இறைவேதத்தின்
ஞானத்தைப் பெற்றிருந்த
ஒருவர்: "உங்களுடைய
கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு
வந்து விடுகிறேன்" என்று
கூறினார்; (அவர்
சொன்னவாறே) அது
தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக்
கண்டதும்; "இது என்னுடைய
இறைவனின் அருட்
கொடையாகும் நான்
நன்றியறிதலுடன்
இருக்கின்றேனா, அல்லது
மாறு செய்கிறேனா
என்று (இறைவன்) என்னைச்
சோதிப்பதற்காகவும்; எவன்
ஒருவன் (இறைவனுக்கு)
நன்றி செலுத்துகின்றானோ அவன்
நன்றி செலுத்துவது
அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன்
(நன்றி மறந்து) மாறு
செய்கிறானோ (அது
அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்)
என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப்
படாதவனாகவும், மிகவும்
கண்ணியம் மிக்கவனாகவும்
இருக்கின்றான்" என்று (ஸுலைமான்)
கூறினார்.
[27:41]
(இன்னும்
அவர்) கூறினார்; "(அவள் கண்டு
அறிந்து கொள்ள
முடியாதபடி) அவளுடைய
அரியாசன(த்தின்
கோல)த்தை மாற்றி
விடுங்கள்; அவள் அதை
அறிந்து கொள்கிறாளா, அல்லது
அறிந்து கொள்ள முடியாதவர்களில்
ஒருத்தியாக இருக்கிறாளா
என்பதை நாம் கவனிப்போம்."
[27:42]
ஆகவே, அவள்
வந்த பொழுது, "உன்னுடைய
அரியாசனம் இது
போன்றதா?" என்று
கேட்கப்பட்டது.
அதற்கு அவள்; "நிச்சயமாக
இது அதைப் போலவே
இருக்கிறது" என்று
கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு
முன்பே நாங்கள்
ஞானம் கொடுக்கப்பட்டு
விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும்
இருக்கிறோம் (என்று
ஸுலைமான் கூறினார்).
[27:43]
அல்லாஹ்வையன்றி
(மற்றவர்களை) அவள்
வணங்கிக் கொண்டிருந்ததுதான்
அவளைத் தடுத்துக்
கொண்டிருந்தது
நிச்சயமாக அவள் காஃபிர்களின்
சமூகத்திலுள்ளவளாக
இருந்தாள்.
[27:44]
அவளிடம்; "இந்த மாளிகையில்
பிரவேசிப்பீராக!" என்று
சொல்லப்பட்டது
அப்போது அவள்
(அம் மாளிகையின்
தரையைப் பார்த்து)
அதைத் தண்ணீர்த்
தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை
நனைந்து போகாமலிருக்க
அதைத்;) தன் இரு கெண்டைக்
கால்களுக்கும்
மேல் உயர்த்தினாள், (இதைக்
கண்ணுற்ற ஸுலைமான்), "அது நிச்சயமாகப்
பளிங்குகளால் பளபளப்பாகக்
கட்டப்பட்ட மாளிகைதான்!" என்று
கூறினார். (அதற்கு
அவள்) "இறைவனே! நிச்சயமாக, எனக்கு
நானே அநியாயம்
செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம்
இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன்
நானும் முற்றிலும் வழிபட்டு)
முஸ்லிமாகிறேன்" எனக்
கூறினாள்.