[27:64]
முதன்
முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர்
அதனை மீண்டும்
உண்டாக்கி வைப்பவனும்
யாh?
வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும்
உங்களுக்கு ஆகாரம்
அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன்
(வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர்
கூறுவீராக "நீங்கள்
உண்மையாளர்களாக
இருந்தால், உங்களுடைய
ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்."
[27:65]
(இன்னும்)
நீர் கூறுவீராக் "அல்லாஹ்வைத்
தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும்
இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை
அறிய மாட்டார்; இன்னும்; (மரித்தோர்
இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள்
என்பதையும் அவர்கள்
அறியமாட்டார்கள்."
[27:66]
ஆனால்
மறுமையைப் பற்றிய அவர்களுடைய
அறிவோ மிகக் கீழ்நிலையிலே
உள்ளது அவர்கள்
அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே
இருக்கின்றனர்
அது மட்டுமா? அதைப்பற்றி
அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.
[27:67]
மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்; "நாங்களும்
எங்கள் மூதாதையரும்
(மரித்து) மண்ணாகிப்
போன பின்னர், மீண்டும்
வெளியே கொண்டு
வரப்படுவோமா?
[27:68]
நிச்சயமாக, இ(ந்த அச்சறுத்தலான)து
எங்களுக்கும்
எங்களுக்கு முன்
சென்று போன எங்கள் மூதாதையருக்கும்
வாக்களிக்கப்பட்டடே
வருகிறது இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி
வேறில்லை" (என்றுங்
கூறுகின்றனர்).
[27:69]
பூமியில்
பிராயாணம் செய்து, குற்றவாளிகளின்
முடிவு என்னவாயிற்று
என்று பாருங்கள்
என்று (அவர்களிடம்
நபியே!) நீர்
கூறுவீராக.
[27:70]
அவர்களுக்காக
நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள்
செய்யும் சூழ்ச்சியைப்
பற்றியும் நீர் சங்கடத்தில்
ஆக வேண்டாம்.
[27:71]
இன்னும்; "நீங்கள்
உண்மை கூறுபவர்களாக
இருந்தால் (வேதனை
பற்றிய) இந்த வாக்குறுதி
எப்பொழுது (நிறைவேறும்?)" என்றும்
அவர்கள் கேட்கிறார்கள்.
[27:72]
நீங்கள்
அவசரப்படுபவற்றில்
சில இப்பொழுதே
உங்களுக்கு வந்து
சேரக்கூடும் என்று
(நபியே!) நீர் கூறிவிடுவீராக.
[27:73]
இன்னும்
நிச்சயமாக உம்
இறைவன் மனிதர்கள்
மீது மிக்க கிருபையுடையவனாகவே
இருக்கின்றான்; ஆனால்
அவர்களில் பெரும்பாலோர்
நன்றி செலுத்துவதில்லை.
[27:74]
மேலும்; அவர்களின்
இருதயங்கள் மறைத்து
வைத்திருப்பதையும், அவர்கள்
வெளிப்படுத்துவதையும்
நிச்சயமாக உம்
இறைவன் நன்கறிவான்.
[27:75]
வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில்
நின்றும் எதுவும்
(லவ்ஹுல் மஹ்ஃபூள்
என்னும்) தெளிவான குறிப்பேட்டில்
பதிவு செய்யப்படாமல்
இல்லை.
[27:76]
நிச்சயமாக
இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு
அவர்கள் கருத்து
வேறுபாடு கொண்டிருந்ததில்
பெரும்பாலானதை விவரித்துக்
கூறுகிறது.