[28:22]
பின்னர், அவர்
மத்யன் (நாட்டின்)
பக்கம் சென்ற போது, 'என் இறைவன்
என்னை நேரான பதையில்
செலுத்தக் கூடும்' என்று
கூறினார்.
[28:23]
இன்னும், அவர்
மத்யன் நாட்டுத் தண்ணீர்(த்
துறையின்) அருகே
வந்தபோது, அவ்விடத்தில்
ஒரு கூட்டத்தினர்
(தம் கால் நடைகளுக்குத்)
தண்ணீர் புகட்டிக்
கொண்டிருந்ததைக்
கண்டார்; அவர்களைத்
தவிர, பெண்கள் இருவர்
(தங்கள் ஆடுகளுக்குத்
தண்ணீர் புகட்டாது)
ஒதுங்கி நின்றதைக்
கண்டார்; "உங்களிருவரின்
விஷயம் என்ன?" என்று
(அப்பெண்களிடம்)
அவர் கேட்டார்; அதற்கு "இம்மேய்ப்பவர்கள்
(தண்ணீர் புகட்டிக்
விட்டு) விலகும்
வரை நாங்கள் எங்கள்
(ஆடுகளுக்குத்)
தண்ணீர் புகட்ட
முடியாது - மேலும்
எங்கள் தந்தை மிகவும் வயது
முதிர்ந்தவர்" என்று
அவ்விருவரும்
கூறினார்கள்.
[28:24]
ஆகையால், அவ்விருவருக்குமாக அவர்
(ஆட்டு மந்தைக்குத்)
தண்ணீர் புகட்டினார்; பிறகு
அவர் (ஒரு மர)
நிழலில் ஒதுங்கி; "என் இறைவா!
நீ எனக்கு இறக்கியருளும்
நல்லவற்றின்பால்
நிச்சயமாக நான்
தேவையுள்ளவனாக
இருக்கின்றேன்" என்று
கூறினார்.
[28:25]
(சிறிது
நேரத்திற்குப்)
பிறகு அவ்விரு
பெண்களில் ஒருவர்
நாணத்துடன் நடந்து
மூஸாவின் முன்
வந்து "எங்களுக்காக
நீங்கள் தண்ணீர்
புகட்டியதற்கான
கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக
எங்கள் தந்தை உங்களை
அழைக்கிறார்" என்று
கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம்
வந்தபோது தம் வரலாற்றை
எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; "பயப்படாதீர்!
அக்கிரமக்கார
சமூகத்தாரை விட்டும்
நீர் தப்பித்துவிட்டீர்" என்று
கூறினார்.
[28:26]
அவ்விரு
பெண்களில் ஒருவர் கூறினார்; "என் அருமைத்
தந்தையே! நீங்கள்
இவரைக் கூலிக்கு
அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள்
கூலிக்கு அமர்த்துபவர்களில்
நிச்சயமாக இவர்
மிகவும் மேலானவர்
பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்."
[28:27]
(அப்போது
அவர் மூஸாவிடம்) கூறினார்; "நீர் எனக்கு
எட்டு ஆண்டுகள்
வேலை செய்யவேண்டும்
என்ற நிபந்தனையின்
மீது, என்னுடைய இவ்விரு
பெண்களில் ஒருவரை
உமக்கு மணமுடித்துக் கொடுக்க
நிச்சயமாக நான்
நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து
(ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம்
விருப்பம்; நான் உமக்கு
சிரமத்தை கொடுக்க
விரும்பவில்லை. இன்ஷா
அல்லாஹ், என்னை
நல்லவர்களில்
உள்ளவராக காண்பீர்."
[28:28]
(அதற்கு
மூஸா) கூறினார் "இதுவே
எனக்கும் உங்களுக்கிமிடையே
(ஒப்பந்தமாகும்), இவ்விரு
தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும்
என் மீது குற்றமில்லை
- நாம் பேசிக் கொள்வதற்கு
அல்லாஹ்வே சாட்சியாக
இருக்கிறான்.